மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து - டலஸ் அலகப்பெரும

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கும் பாதாள உலகக் கோஷ்டியினரால் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு இன்று இடம்பெற்றது. இங்கு கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிச் சென்ற பாதாள உலக கோஷ்டியினரை மீண்டும் தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டுக்குள் வரவழைத்துள்ளதாகவும் அவர்களுடன் ஆட்சியாளர்கள் வெளிப்படையாக செயற்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -