யு ஆ கீத் திருகோணமலை-
திருகோணமலை வைத்தியசாலையில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் வயதான நோயாளர்களுக்கு இரத்த அலுத்தம் மற்றும் சக்கரையின் அளவு பரிசோதிப்பது வழக்கம். இன்றும் நோயாளர்கள் காலை 7.00 மணிக்கு வந்தபோது வழமையாக சோதிக்கும் வைத்தியர் லீவு எடுத்துள்ளார் மற்றொருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வரும் வரை காத்திருக்குமாறு வைத்தியசாலை சிற்றுழியர்களாள் கூறப்பட்ட போதும் நண்பகல் 12.00 மணிவரை வரவேண்டிய வைத்தியர் வரவில்லை.
குழப்பமடைந்த அவ்வயதான நோயாளர்கள். திருகோணமலை வைத்தியசாலை பனிப்பாளர் வைத்தியர் அனுஷயா ராஜ்குமாரிடம் தம்முடை பிரச்சனைகை எடுத்து கூறினர். அவரும் வரவேண்டியவரை அலைத்தபோதும் அவர் வர மறுத்துவிடவே லீவில் போனவரை மறுபடியும் அலைத்து வைத்தியம் பார்க்க வைத்ததுள்ளார். ஒரு வைத்தியரின் தனிப்பட்ட நடைத்தைகளினால் வயதான நோயாளர்கள் வீண்சிரமத்திற்கு முகம்கொடுக்க நேறிட்டடுள்ளது.
