வாழ்வாதாரம் தரும் தேசத்தின் மகிழ்ச்சியில் நாமும் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில் "குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)" ஏற்பாடு செய்த "குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி" வெள்ளிக்கிழமை (24/02/2017) அன்று குவைத் கே-டிக் தமிழ் பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் "குவைத் காயிதே மில்லத் பேரவை"யின் "சமுதாயத்தின் சவால்கள்" மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த கடையநல்லூர் சட்டமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் உறுப்பினரும், அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளருமான அல்ஹாஜ் "சட்டமன்ற சமுதாயக் குரல்" கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பி.எஸ்சி, எம்.எல்.ஏ அவர்கள் சிறப்புரையாற்றினார்.
சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்களின் தலைமையில் இச்சிறப்புமிகு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினருக்கு சால்வை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. குவைத் ஜைன் தொலைதொடர்பு நிறுவனம் வழங்கிய தேசிய தின அன்பளிப்புகளை குழந்தைகளுக்கு சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
சங்கத்தின் பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மது பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார். துணைத்தலைவர் மவ்லவீ எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ ஜும்ஆ பேருரையாற்றினார். துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ பிரார்த்தனை (துஆ) செய்ய நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
ஏறக்குறைய 1,200க்கும் மேற்பட்ட தமிழக, இலங்கை சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் சங்கத்தின் சிறப்பு வெளியீடுகளான 12ம் ஆண்டு சிறப்பு மலர் மற்றும் 2017ம் வருட நாட்காட்டி ஆகியவை அன்பளிப்புகளாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
சிறப்பு விருந்தினரின் முழு உரையை கேட்க... வீடியோ பார்வைக்கு:...


