நாட்டின் அரசியல் சூழலும் அதன் போக்கும் மிகவும் மோசமான கட்டத்தை எட்டியிருக்கும் சூழலில் முஸ்லிம் சமுகத்தின் அரசியல் அடையாளம் அதன் உண்மையான தலைமையாக கடந்த கால நிகழ்வுகளை வைத்து மக்கள் தேசியக் காங்கிரஸ் தலைமையை பலப்படுத்தவும் முன்வருகின்றனர்.
இந்த சூழலில் சகோதரர் புஹாரி போன்றோர் அவர்களது காரமான தன்மைகளால் தேசிய காங்கிரஸை விமர்சிப்பதானது வெட்கத்தனமானது என தேசிய காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் இன்று அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
மேலும் அவர் உரையாற்றும் போது;
சகோதரர் புஹாரி கடந்த மாநகர சபை தேர்தலில் குதிரை சின்னத்தில் போட்டியிட்டு போட்டியிட்ட வேட்பாளர்களில் ஆகக் குறைந்த விருப்ப வாக்குகளை பெற்றவர். அந்த தேர்தலில் அவரை தேசிய காங்கிரஸ் தலைவர் நிறுத்தியதன் மூலம் அவரின் வாசல் கதவை அதாஉல்லா அமைச்சர் திறக்க வைத்து வரலாற்று சாதனை புரிந்ததாக அக்கரைப்பற்று மக்கள் பேசிக் கொண்டனர்.
அதன் பின்னர் அமைச்சருடன் முரண்பட்டு அம்பாரை தயாகமே வை தனது வீட்டுக்கு அழைத்து வந்து முஸ்லிம்களின் வாக்கு இனவாதி தயாகமகே வை சென்றடைய பிரச்சாரம் மேற் கொண்டார், பின்னர் தயாரத்னவை அழைத்து வந்தார்.இப்போது இறுதியாக சதோச நிருவன அமைச்சர் ரிசாட் பதியுதீனுடைய கட்சியில் வந்து இன்று அதாஉல்லா சரியாக சமுகத்தை வழிநடாத்த தவறினார் என்பது ஒரு அரசியல் கோமாளியின் வெட்கம் கெட்ட தனம்.
தயாகமகே வை அழைத்து வரும் போது சகோதரர் புஹாரி சமுகத்தை சிறந்த முறையில் வழி நடாத்தினாரா? மாணிக்க மடுவில் சிலை வைக்கும் போது இந்த சகோதரர் எங்கே போனார்? முழு கிழக்கு மாகாணமும் சமுக விடுதலை பயணத்தில் தன்னை வரிந்து கட்டிக் கொண்ட உண்மைக்கு உண்மையான தலைமையை மாயைகளால் தோற்கடித்த அவலத்தில் அங்கலாய்க்கும் போது இவரின் கருத்து எடுபடப்போவதில்லை என்றார்.
இந்த நிகழ்வில் தேசிய காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளர் யூ.எல்.உவைஸ், கிழக்கு மாகாண கொள்கை பரப்பு செயலாளர் பிஸ்ரின் தேசிய காங்கிரஸ் பிரமுகர்களான சம்சுதீன் ஹாஜியார், இப்றாஹிம் பியாஸ்,சகோதரர் பர்சான் ,சறூக் ஹாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
