அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-ரொட்டவெவ அஸ்மி பாலர் பாடசாலை மற்றும் இக்ராஹ் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (25) பள்ளி வாசல் மத்ரஷா மண்டபத்தில் நடைபெற்றது.
கிண்ணியா நகர சபையின் முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் டொக்டர் ஹில்மியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இரண்டு முன்பள்ளிகளைச்சேர்ந்த 50ற்கும் மேற்பட்ட சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மொறவெவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ்.எம்.பைசர் மற்றும் மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளி வாசல் பேஷ் இமாம் எம்.நஸார்தீன் மௌலவி.பள்ளி வாசல் தலைவர் அப்துல்சத்தார் மௌலவி மற்றும் கிராமமுக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.