ஹம்ஸா கலீல்-
நுவரெலியா, பதுளை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயத்தை மேற் கொண்டிருந்த ஶ்ரீலங்கா ஹிறா பௌண்டேசன் தலைவர் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் நுவரெலியா மாவட்டத்தின் பிந்தங்கிய பிரதேசமான வெலிமடை, பொரகஸ் பிரதேசத்திற்கு கடந்த சனிக்கிழமை 25.02.2017 விஜயம் செய்தார்.
இவ்விஜயத்தின் போது பொரகஸ் மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாயலுக்கும் விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் பள்ளிவாயல் நிர்வாகிகள், பிரதேச மக்கள், பொரகஸ் முஸ்லிம் மகாவித்தியால அதிபர், ஊவா மாகாண வெலிமடை வலயக்கல்வி பணிப்பாளர், உலமாக்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடலை மேற்கொண்டு பிரதேசத்தின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார்.
இக் கலந்துரையாடலின் போது பொரகஸ் பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை இல்லாத பிரச்சனை முக்கிய பிரச்சனையாக சுட்டிக்காட்டப்பட்டது. ஆரம்ப பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் இணங்கிய போதும் ஊவா மாகாண முதலமைச்சர் உடன் பட்ட போதும் பாடசாலை அமைப்பதற்கான காணியை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் ஆரம்ப பாடசாலை அமைக்க முடியாத சூழ்நிலை எற்பட்டுள்ளதாக மக்களால் கூறப்பட்டது.
ஆரம்ப பாடசாலைக்குரிய காணியை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், உடனடியாக அது தொடர்பான வேலைகளை ஆரம்பிக்குமாறும் கலந்துரையாடலின் போது அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் உத்தரவிட்டார்.
இதன்போது மஸ்ஜிதுன் நூர் ஜும்மா பள்ளிவாயல் கட்டட வேலைகளுக்காக, ஶ்ரீலங்கா ஹிரா பெளண்டேசன் நிதி ஒதுக்கீட்டில் பத்து இலட்சம் ரூபா நிதி இராஜாங்க அமைச்சர் அவர்களினால் பள்ளிவாயல் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஊவா மாகாண வெலிமடை வலயக்கல்வி பணிப்பாளர், பொரகஸ் மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினர், பொரகஸ் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் அதிபர், பிரதேச மக்கள், உலமாக்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.