அம்பாரை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்று காரை தீவு சந்தியில் மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ள பட்டதாரிகள் தங்களுக்கான சரியான அரச நியமனங்களை உடனடியாக வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகத்தில் கற்று பட்டமும் பெற்று இன்னும் அரச தொழில் வழங்காது பரீட்சைகள் என்று இழுத்தடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இன்னும் பல கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
கடந்த 2012.03.31 ஆண்டுக்கு பிந்திய எந்தப்பட்டதாரிகளுக்கும் இதுவரை நியமனம் வழங்கப்படாமை பட்டதாரிகளை அரசாங்கம் ஏமாற்றும் செயல் என்றும் பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1500க்கு மேற்பட்ட பட்டதாரிகள் ஏழு நாட்களாக இடைவிடாது போராட்டத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




