தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 5 பேர் குளவிகொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில்





க.கிஷாந்தன்-

ட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் லெதண்டி தோட்டத்தில் 27.02.2017 இன்று முற்பகல் 11 மணியளவில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 5 பேர் குளவிகொட்டுக்கு இலக்காகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மரத்தின் அடிபகுதியில் இருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுமதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குளவி கொட்டுக்கு இழக்கானவர்களில் 4 பேர் பெண் தொழிலாளர்கள் எனவும் ஒருவர் ஆண் தொழிலாளர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -