நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
இலங்கை போக்குவரத்து சபையின் நவலப்பிட்டி டிப்போ அதிகாரிகளும் ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது. நாவலபிட்டிய டிபோ ஊழியர் ஒருவரை 27.02.2017 மறக்கரி வியாபாரி ஒருவர்தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே 28.02.2017 ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தாக்குதலுக்கு இழைக்காகிய ஊழியர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஊழியரை தாக்கிய நபரை சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரியும் அரசாங்க ஊழியரை தாக்கியமைக்கு எதிர்பு தெரிவித்துமே ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பத்து.
ஆர்பாட்டத்தினால் நாவலப்பிட்டி பிரதேச சகல அரச பஸ் வண்டிகளின் மார்க்ங்களுக்குமான போக்குவரத்து ஸ்தம்பிதமானதுடன் தனியார் பஸ் சேவை வழமை போல் இடம்பெற்றது மேலும் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.



