யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு மற்றும் சுய தொழில் முயற்சியாளர்கள் கண்காட்சி அங்குரார்ப்பண நிகழ்வுகள்.
புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் கீழுள்ள புனர்வாழ்வு அதிகார சபையினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வும், மற்றும் அதிகாரசபையினால் வழங்கப்பட்ட தொழில் முயற்சிக்கான கடனுதவி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்தலுக்கான கண்காட்சி ஆரம்பிக்கும் நிகழ்வும் கடந்த 26.02.2017 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையின் பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், அமைச்சின் செயலாளர் திரு விக்ரமசிங்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி திருநாவுக்கரசன் மற்றும் அதிகாரசபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உருப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அதிதிகளினால் கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 30 பேர் சொத்து இழப்பினை எதிர் கொண்ட அரச உத்தியோகத்தர்கள் 35, பாதிக்கப்பட்ட 10 வணக்கஸ் தலங்கள், 30 பொதுச் சொத்து அழிவுகளுக்குமாக 105 பேருக்கு 75 இலட்சத்து 43ஆயிரத்து 603 ரூபாக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுக் காசோலைகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
ஹம்ஸா கலீல்-






