பொடுபோக்காக செயற்படும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கிழக்கு முதல்வர்

கிண்ணியா பகுதியில் டெங்கு காய்ச்சலால் அதிகமானோர் பீடிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களு்ககும் சம்மதப்பட்ட அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமையினால் அங்கு டெங்கு அபாய நிலை தோன்றியுள்ளது, டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு 7 வயது சிறுவனொருவன் உயிரிழந்ததையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது, இதனால் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் ஏதுவாக சூழலை வைத்திருப்பவர்கள் மீது கடும் சட்டநடவடிக்கை எடுக்குமாறும் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயமுள்ள இடங்களை அடையாளங்கண்டு அவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் தெரிவித்தார்,

அத்துடன் தற்போது ஏற்பட்டு்ள்ள நிலைமையில் பொடுபோக்காகவும் பாராமுகமாகவும் செயற்படும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார், இதேவேளை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் டெங்குக் காய்ச்சல் பரவி வருவதால் அங்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட வேண்டுமென பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கிண்ணியாவில் மாத்திரம் நான்குபேர் டெங்கு நோயில் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதுடன் 316பேர் நோயாளர்களாக உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -