கொழும்புக்கு கஞ்சா கடத்திய இருவர் சிக்கினர் - 22கிலோ கஞ்சா மீட்பு

பாறுக் ஷிஹான்-
டமராட்சி பகுதியில் இருந்து கொழும்புக்கு கஞ்சா கடத்த முற்பட்ட இருவர் இன்று(24) அதிகாலை பளை போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 22கிலோ கேரள கஞ்சாவினையும் கைபெற்றியுள்ளதாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எஸ்.டபள்யூ றஞ்ஜன பண்டார தெரிவித்தார்.

அதிகாலை 2:00 மணியளவில் பளை போக்குவரத்து பொலிஸார் வீதிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த கார் ஒன்று சோதனையிடப்பட்டது. 

காரில் இருந்த இருவரையும் விசாரணை செய்த போது முன்னுக்கு பின்னர் முரணான வகையில் பதில் அளித்துள்ளனர். மேலும் சந்தேகம் அடைந்த பொலிஸார் காரின் பின் கதவினை திறந்து பார்த்த போது, இரண்டு கைபைகளில் கஞ்சா இருந்ததனை அவதானித்துள்ளனர். 

இவ்வாறு கைபெற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 36 இலட்சம் என தெரிவித்த பொறுப்பதிகாரி கைதான சந்தேக நபர்கள் உடுப்பிட்டி வல்வெட்டித்துறை பகுதியினை சேர்ந்த 37வயதுடைய லேகேஸ்வரன் இந்திரபாஸ்கர், மற்றும் 25வயதுடைய கரவெட்டி நெல்லியடி பகுதியினை சேர்ந்த சிவஞானம் தயாளன் என பொறுப்பதிகாரி தெரிவித்தார். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், விசாரணை நிறைவு பெற்றதும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -