அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் இன்று 27 வரை 1050 டெங்கு நோயாளர்கள் இணங்கானப்பட்டுள்ளதாகவும் அதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் பீ.கயல்விழி தெரிவித்தார்.
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 155 டெங்கு நோயாளர்களும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 278 நோயாளர்களும் குறிஞ்சாங்கேணி பிரிவில் 68 நோயாளர்களும் மூதூர் சுகாதார பிரிவில் 318 டெங்கு நோயாளர்களும் மொத்தமாக மாவட்டத்தில் 1050 டெங்கு நோயாளர்கள் இணங்கானப்பட்டுள்ளதுடன் கிண்ணியாவில் மாத்திரம் 03 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிண்ணியா-மூதூர்-திருகோணமலை போன்ற வைத்தியசாலைகளில் அதிகளவில் டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் வைத்தியசாலைகளுக்கு அதிகளவான மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பீ.கயல்விழி மேலும் கூறினார்.
