தமிழ் மக்­களை மீண்டும் படு­கு­ழியில் தள்­ளாதே - விஜ­ய­கலா மகேஸ்­வரன்

தமிழ் மக்­களை மீண்டும் படு­கு­ழியில் தள்­ளாது அபி­வி­ருத்­தி­யிலும் வேலை­வாய்ப்­பிலும் அவர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்டும். வடக்கு மக்கள் புலி­க­ளுக்கு வாக்­க­ளித்­தார்கள் என்­ப­தற்­கா­கவும் அவர்­களின் கட்­டுப்­பாட்­டுக்குள் வாழ்ந்­தார்கள் என்­ப­தற்­கா­கவும் கடந்த ஆட்­சி­யி­னரால் வீதிக்கு இறக்­கப்­பட்­டனர். இந்த நிலைமை இனியும் தொட­ரக்­கூ­டாது. வட­மா­கா­ணத்­திற்கு பூரண அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் என்று சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்தார்.

அவுஸ்­தி­ரே­லிய நாட்டின் 100 மில்­லியன் ரூபா, உலக வங்­கியின் 50 மில்­லியன் ரூபா நிதி­யு­த­வி­யுடன் குறி­கட்­டு­வா­னுக்கும் நெடுந்­தீ­வுக்­கு­மான பாது­காப்­பான போக்­கு­வ­ரத்­துக்கு புதி­தாக அமைக்­கப்­பட்ட நெடுந்­தா­ரகை பய­ணிகள் படகுச் சேவை­யினை ஆரம்­பிக்கும் நிகழ்வு நேற்று குறி­காட்­டுவான் இறங்­கு­து­றையில் நடை­பெற்­றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்­நி­கழ்வில் உள்­ளூ­ராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்­தபா, வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன், கூட்­ட­மைப்பு எம்.பி. எம்.ஏ.சுமந்­திரன், அவுஸ்­தி­ரே­லிய தூதுவர், மாகாண சபை உறுப்­பி­னர்கள், மாகாண திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்கள் எனப் பெரு­ம­ள­வானோர் கலந்­து­கொண்­டனர். 

இங்கு தொடர்ந் தும் உரை­யாற்­றிய இரா­ஜாங்க அமைச் சர் விஜ­ய­கலா மகே ஸ்­வரன். கடந்த இரு­பது வரு­டங்­க­ளாக தீவுப்­ப­கு­தி­க­ளுக்கு உரிய போக்­கு­வ­ரத்து வச­திகள் இருக்­க­வில்லை. தற்­போது இந்­தப்­ப­ட­கினை வழங்­கியன் மூலம் போக்­கு­வ­ரத்­துக் கான வசதி செய்­து­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களைப் பொறுத்­த­வ­ரையில் வரட்­சிக்கும் வறு­மைக்கும் நாம் முகம்­கொ­டுத்து வரு­கின்றோம். வடக்கில் வழ­மை­யாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்­க­ளி­லேயே வரட்சி ஏற்­ப­டு­வது வழக்­க­மாகும். ஆனால் தற்­போது ஜன­வ­ரி­யி­லேயே வரட்சி ஏற்­பட்­டி­ருக்­கி­றது. வரட்­சி­யினால் வடக்கு, கிழக்கு பகுதி மக்­களே அதி­க­ளவில் பாதிப்பை சந்­தித்­துள்­ளனர். 

நெடுந்­தீவு, ஊர்­கா­வற்­றுறை, அன­லை­தீவு, எழு­வைதீவு ஆகிய பகு­தி­களில் வாழும் மக்கள் உரிய பட­குச்­சே­வை­யின்றி பெரும் சிர­மங்­களை எதிர்­நோக்­கி­ வ­ரு­கின்­றனர். உரிய போக்­கு­வ­ரத்து வசதி இன்­மையால் இவர்கள் தொன்­று­தொட்டு கஷ்­டப்­பட்டு வரு­கின்­றனர். இப்­ப­கு­தி­க­ளுக்கு அர­சாங்க ஊழி­யர்கள் நிய­மிக்­கப்­ப­டும்­போது அவர்கள் போக்­கு­வ­ரத்து கஷ்டம் கார­ண­மாக அங்கு செல்வதற்கு மறுக்­கின்­றனர். சிலர் தீவுப்­ப­கு­திக்கு கட­மை­யாற்­று­வ­தற்கு செல்­வதே இல்லை. இதனால் தீவுப்­ப­குதி மாண­வர்கள் கல்வி துறையில் பின்­தங்­கி­யுள்­ளனர். கல்வி உட்­பட சகல வச­தி­க­ளையும் இவர்கள் இழந்­தி­ருக்­கின்­றனர்.

உரிய போக்­கு­வ­ரத்து சேவை­யின்­மையால் இந்த மக்கள் பெரும் பாதிப்­புக்­களை சந்­திக்­கின்­றனர். கடந்த முப்­ப­து­வ­ரு­ட­கால யுத்­தத்தின் போது கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்ட மக்கள் பெரும் கஷ்­டங்­களை அனு­ப­வித்­தனர். இதேபோல் தீவுப்­ப­கு­தியும் உரிய போக்­கு­வ­ரத்து வச­தி­யின்­மையால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­யா­கவே காணப்­ப­டு­கின்­றது. அன­லைதீவு, எழு­வை­தீவு, நயி­னா­தீவு உட்­பட தீவுப்­ப­கு­திக்­கான பட­குச்­சே­வையை அதி­க­ரித்து போக்­கு­வ­ரத்­தினை இல­கு­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

யுத்­தத்­திற்கு முன்னர் கல்­வியில் சிறந்­து­வி­ளங்­கிய வட­மா­காணம் தற்­போது பெரும் பின்­ன­டைவை சந்­தித்­தி­ருக்­கி­றது. யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு எதிர்­கா­லத்தில் முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்டும். புலி­க­ளுக்கு வாக்­க­ளித்­தார்கள் என்­ப­தற்­கா­கவும் புலி­களின் கட்­டுப்­பாட்­டுக்குள் வாழ்ந்­தார்கள் என்­ப­த­னாலும் வட­ப­குதி மக்­களை கடந்த அர­சாங்கம் வீதிக்கு இறக்­கி­யி­ருந்­தது. வட மாகா­ணத்­திற்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. நிதி வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கு சரி­யான அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும். முத­ல­மைச்­சரின் அதி­கா­ரங்­களை அதி­க­ரிப்­ப­துடன் மாகா­ண­ ச­பைக்கும் உரிய நிதியும் அதி­கா­ரமும் வழங்­கப்­ப­ட­வேண்டும். தற்­போ­தைய சூழ்­நி­லையில் ஒரு­வரை இட­மாற்­று­வது என்றால் கூட மாகா­ண­ச­பை­யா­னது மத்­திய அர­சிடம் செல்­ல­வேண்­டிய சூழல் காணப்­ப­டு­கின்­றது.

ஏனைய மாகா­ணங்­களில் முத­ல­மைச்­சரும், ஆளு­நரும் இணைந்து பல்­வேறு செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர். எமது வட­மா­காண தொண்டர் ஆசி­ரி­யர்கள் தமக்கு நிரந்­தர நிய­மனம் கோரி பல வரு­டங்­க­ளாக போராடி வரு­கின்­றனர். ஆனால் இன்­னமும் உரிய நிய­மனம் வழங்­கப்­ப­ட­வில்லை. அண்­மையில் வேறொரு மாகா­ணத்தில் 1987 ஆம் ஆண்டு முதல் தொண்டர் ஆசி­ரி­யர்­க­ளாக பணி­யாற்­றி­ய­வர்­க­ளுக்கு நிரந்­தர நிய­மனம் வழங்­கப்­பட்­டதை தொலைக்­காட்சி செய்­தி­மூலம் நான் பார்த்தேன். இவ்­வா­றான நிலையில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு இத்­த­கைய சந்­தர்ப்­பங்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டமை தவ­றா­ன­தாகும்.

கடந்த 30 வரு­ட­கா­ல­மா­கவே நெடுந்­தீவு, அன­லை­தீவு, ஊர்­கா­வற்­றுறை, வேலணை, உட்­பட தீவுப்­ப­கு­தி­களில் வீதிகள் போடப்­ப­ட வில்லை. உரிய போக்குவரத்து வச­திகள் வழங்­கப்ப­ட­வில்லை. இத்­த­கைய குறை­பா­டு­க­ளுக்கு நல்­லாட்சி அர­சாங்கம் தீர்­வு­கா­ண­வேண்டும். தீவுப்­ப­கு­தி­களை உள்­ள­டக்­கிய பிர­தே­சங்­க­ளுக்கு கூடு­த­லான நிதி வழங்­கப்­ப­டுதல் வேண்டும். 2002 முதல் 2004 வரை எனது கணவர் மகேஸ்­வரன் அமைச்­ச­ராக இருந்­த­போது காரை­நகர் பிர­தேச செய­லகம் உரு­வாக்­கப்­பட்­டது.

ஆனால் அதன் பின்னர் கடந்த அர­சாங்க காலத்தில் மகேஸ்­வரனின் குடும்­பத்­திற்­காக காரை­நகர் மக்கள் பழி­வாங்­கப்­பட்­டனர். எனவே இத்­த­கைய பிர­தேச சபை­க­ளுக்கு கூடுதல் நிதிகள் வழங்­கப்­ப­டுதல் வேண்டும். யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடபகு திக்கு விகிதாசார அடிப்படை யில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். அந்த விடயத்தில் நல்லாட்சி அரசாங்க மும் தவறிழைத்து வருகின்றது. 

பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்ற மாணவர் கள் மரக்கறி விற்பதிலும், வீதிகளை செப்பனி டும் பணிகளிலும் ஈடுபடும் நிலை காணப்ப டுகின்றது. இந்த நிலைமை மாற்றியமைக்கப் படவேண்டும். நல்லாட்சி அரசாங்கமானது சரியான முறையில் வேலைவாய்ப்புக்களை வழங்கவேண்டும். தற்போதும் வடபகுதிக்கு தென்பகுதியிலுள்ளவர்களை நியமிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது.

இத்தகைய நியமனங்கள் நிறுத்தப்படவேண்டும். மக்களை மீண்டும் படுகுழியில் தள்ளாது வீதியில் இறக்காது அபிவிருத்தியிலும் வேலைவாய்ப்பிலும் வடபகுதி மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -