வடக்கு கிழக்கில் முஸ்லிம்களின் காணிகளை ஆக்கிரமிப்பு செய்ய இனவாத சக்திகள் திட்டம்..!

டக்கு கிழக்கில் இனவாத சக்திகள், முஸ்லிம்களின் காணிகளை ஆக்கிரமிப்பு செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன இதனை தடுத்து நிறுத்துவற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்காக அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன் வரவேண்டும் என நாபீர் பெளண்டேசன் சிறீ லங்கா அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான பொறியியலாளர் யு.கே. நாபீர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தனது அறிக்கையில் குறிப்பிடும் போது,

தொல் பொருள் அகழ்வராய்ச்சி எண்ணும் கருப்பொருளில் சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில் மேற்கொண்டுவரும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக தமிழ் பேசும் சமூகங்களின் வாழ்விடங்கள் சூறையாடப்படும் நிலை அதிகரித்து வருகிறது. இது சிறுபான்மை மக்களின் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும் அத்தோடு பாரிய உரிமை மீறலான விடயமுமாகும்.

நாட்டின் தலைமை மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது தமிழ் பேசும் சமூகங்களின் சிறப்பான ஆதரவுடன் எனவே, சிறுபான்மைகளை நசுக்குகின்ற நிலைமை இந்த ஆட்சியில் விசேடமாக தொடர்வது தடுக்கப்பட வேண்டும்.

கட்சிகள் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதை விட இந்த சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும். 

எமது அமைப்பின் மூலமாக எதிர்வரும் காலங்களில் மக்களுக்காக அரசியல் ரீதியில் பாரிய சேவையாற்ற பல்வேறு திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகிறோம். முஸ்லிம்களின் இருப்பு விடயத்தில் எமது அமைப்பு பல்வேறு அழுத்தங்களை எதிர்காலத்தில் ஆட்சியாளர்களுக்கு வழங்கும். அதே பாதையில் முஸ்லிம் சமூகத்தை அநாதைகளாக்கி விடாமல் தலை நிமிர்ந்து வாழ வைக்க எமது அதிகார அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளை அவர்களுக்கு விடுக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -