எங்களையும் கொஞ்சம் திரும்பிப் பாருங்களேன்..

ஹஸ்பர் ஏ ஹலீம்-

வான்எல ஆயிலியடி, கிண்ணியா எல்லைப்புற கிராமம் கிண்ணியா அரசியல் தலமைகளின் அத்திபெட்டி இந்த கிராமத்தின் குள்ளமானவர் யாறும் கண்டு கொள்ளா திறமைசாலி நசூர் முஸம்மில். இவரது குடும்பத்தில் இன்னும் பல மாற்று திறனாலிகள் தம்பி 14 வயதில் நடக்க முடியமால் வீட்டில் சுருண்டு கிடக்க, தங்கை இன்னுமொறு மாற்று திறனாலி. தந்தை விவசாயம் செய்த போதும் சிறிய வருமானத்தில் குடும்பம் கடிண வாழ்க்கைக்கு மத்தியில் வாழ்க்கிறது.

முஸம்மில் 28 வயது இளஞர் காதலித்து திருமணம் செய்தவர் அவரது மனைவி கூட இஸ்லாதை தழுவியவர் முஸம்மிலின் திறமையால் ஈர்க்கபட்டதால் மாற்று திறனாலி என அறிந்தும் கூட இவர்கள் இருவறும் குடும்ப வாழ்க்கையில் இணைந்தனர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. முஸம்மில் மிக சிறந்த சித்திர களஞர் பார்ததை அப்படியே வரையும் ஆற்றலும் பதாதைகள் எழுதும் பழக்கமுடைய இவறுக்கு தனது கிராமத்தில் திறமையை வெளிப்படுத்துவதற்கான இடம் கிடைக்கவில்லை அது மிக சிறிய கிண்ணியாவின் எல்லைபுற கிராமமாகும். இருந்தும் மனவலிமையுடன் தனது ஊணத்தை கருத்தில் கொள்ளாது செயற்படும் முஸம்மில் க. பொ. தா ( சா/ த ) சித்தியடைந்து க. பொ. த ( உ/ த) முதலாம் ஆண்டு கால் பதித்த போதும் தனது கல்வியை தொடர முடியவில்லை இவர் க. பொ. த ( உ/ த) படித்த போது ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் தன்நம்பிக்கையுடையவர்.

இவர் தனது இயலாமையை வெளிக்காட்டாது தகவல் தொழில் நுட்பத்துறை, ஏனைய சில கற்கைநெறிகளையும் பயின்றவர் என்பதுடன் அரச தொழில் துறையில் இணைவதற்காக முயற்சித்த போதும் இவறுக்கு இன்னும் அவை சரியாக அமையவில்லை. தற்போது திருகோணமலை உணவகம் ஒன்றில் தனது குடும்பத்துக்காக கூலி தொழில் புரிந்து வருகிறார். தனக்குள் இத்தனை திறமைகள் இருந்தும் அதற்கான களம் அமையவில்லை என்பதில் வருத்தமிருந்தும் தனது மனவலிமையால் தான் ஊணமூற்றவராக இருந்தும் இன்னும் போராடுகிறார் தனது வாழ்க்கையில் நிலையான ஓர் தொழிலினை பெற்றுக்கொள்ள Handicap International, Sevalanka etc போன்ற நிறுவனங்களில் தனது திருமணதிற்க்கு முன்னர் பணிபுரிந்துள்ளார். இவர் இலங்கை கிரிக்கெட் அணிவீரர் சங்ககரவினது அதி தீவிர இரசிகன் என்பது குறிப்பிட தக்கது. இவரின் மனவலிமையில் நாமும் கைகோர்க்கலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -