முசலியின் துயரங்களின் மீதேறி றிசாட்டை பழி தீர்ப்பது அரசியல் வங்குரோத்தாகும் அஸ்மி

ரண்டு விடயங்களை ஓரே நேரத்தில் முஸ்லீம் தேச அரசியல் பிரமுகர்கள் மேற் கொள்வதே இப்போதைக்கு துர்பாக்கியமான விஷயமாகும்.

01. வில்பத்து தொடர்பான விஷயமும்
02.ரிசாட் மீதான அரசியல் எதிர் நிலையும்

1901ம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின் போது இலங்கையின் முஸ்லிம்களின் வாழ்விடப்பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டிருக்கின்ற முசலியில் சுமார் 129 குடும்பங்களிலும் மறிச்சுகட்டியிலும் 107 குடும்பங்களும் விடத்தல்தீவு,தாராக்குண்டு,அகத்திமுறிப்பு, போன்ற பிரதேசங்களும் சுமார் நூற்றிபத்து ஆண்டுகளுக்கு முன் பெறப்பட்ட மதிப்பீட்டில் குறிப்பிடப்படுகின்ற முஸ்லிம்களின் பிரதேசங்களாகும்.

இன வன்முறை காரணமாக அந்த மக்கள் தமது சொந்த நிலத்தில் அகதிகளாக உடுத்த ஆடையுடன் வெளியேற்றப்பட்ட மக்கள் அந்த யுத்தம் முடிவுற்று அவர்களை வெளியேற்றிய கொடுரர்கள் அழிந்தொழிந்து இன்று சொந்த நிலயத்துக்கு போவதற்க்கு தயாராக இருக்கின்ற சூழலில் இடைப்பட்ட காலத்தில் இனவாத அரச இயந்திரங்களால் ஏற்படுத்த பட்ட சில சட்ட ரீதியான விடயங்கள் மக்களை மீள குடியேற்ற தடையாக இருக்கின்றன.

எனவே இவ்வாறான சமுக விடயங்கள் ஏற்படுகின்ற இடத்தில் எம் சமுகத்தின் தலைமைகள் என கூறுபவர்கள் ஒற்றுமையுடன் இதை எதிர் நோக்க தவறி விடுவது எவ்வளவு பெரிய துர்ப்பாக்கிய நிலை.

அமைச்சர் ரிசாட் மீதான அரசியல் ரீதியான தவறுகளை சுட்டி காட்ட இது தகுந்த நேரமா? என்பதை இன்று அவரின் அரசியல் எதிரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்

சில சமுக விரோத ஊடகங்கள் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு மாற்ற மான நிலைப்பாட்டையே எடுத்து வருகின்ற நிலையில் முசலி பிரதேசத்தினுடைய பிரச்சினையை ரிசாடின் தனிப்பட்ட அரசியல் பிரச்சனைகளோடு சேர்த்து விட நினைப்பது அப்பட்டமான ஊடக விபச்சாரமாகும்.

சகோதரர் ஹமீட் அவர்களுக்கும் ரிசாட் அமைச்சருக்கும் அரசியல் ரீதியான பல்வேறு குழறுபடிகளும் பிரச்சினைகளும் இருக்கலாம்

அவரை பழி தீர்ப்பதற்கு சில ஊடகங்கள் ஹமீட் அவர்களை பயன்படுத்துகின்றன. ஆனால் முசலி என்கின்ற சமுகப் பிரச்சினையின் மீதேறி ரிசாட்டை முடக்க நினைப்பது
இருபது வருட கண்ணீரால் கழுவப்பட்ட மக்களின் நலன்களை புதைக்கின்ற செயற்பாடாகும்.

அதை விடுத்து இன்னுமொன்றை நான் கூற வேண்டும் ஒருவரோடு கூடவே இருந்து அவரது அரசியல் நலன்களை அனுபவித்த பின் அவரை பிரிவதாக இருந்தால் அவரது அரசியல் கருத்து நிலைகளை விமர்சியுங்கள்
வீணாக தனிப்பட்ட விடயங்களை விமர்சிப்பது பக்குவம் வாய்ந்த அரசியல் வாதிகளின் நாகரியமாக நாம் உணரவில்லை.

வீணான வாதங்களை தவிர்த்து யார் சரி யார் பிழை என்பதை விட அரச இனவாதத்தால் முடக்கப்பட்டிருக்கின்ற முசலி மக்களின் மீள் குடியேற்றத்துக்கு ஒற்றுமையுடன் குரல் கொடுப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -