கிழக்குப் பல்கலைக் கழகத்தினால் விடுக்கப்படும் அறிவித்தல்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

கிழக்குப் பல்கலைக் கழக கவுன்ஸில் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கூடிய அதன் விஷேட கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதால் அதனைக் கடைப்பிடித்தொழுகுமாறு சகல மாணவர்களும் அறிவுறுத்தப்படுவதாக கிழக்குப் பல்கலைக் கழக பதிவாளர் கேட்டுள்ளார்.

கிழக்குப் பல்கலைக் கழக பதில் துணைவேந்தரால் கையொப்பமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுளூ

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பிரதான நிர்வாகக் கட்டிடத் தொகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக ஆக்கிரமிப்பு ரீதியில் அமர்ந்;திருக்கும் மாணவர்களின் விடயங்கள் சம்பந்தமாக பின்வரும் அறிவித்தல் மேற்கொள்ளப்படுகிறது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பேரவை 20.01.2017 அன்று பி.ப 4.30 மணியளவில் நடைபெற்ற அதன் விசேட கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்களை எடுத்துக் கொண்டுள்ளது.

• எல்லா மாணவர்களுக்கும் விடுதி வசதி வழங்கப்பட வேண்டும்

• இரண்டாம் வருட மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு தங்குமிட வசதி கிழக்குப் பல்கலைக் கழகத்துக்கு வெளியே உள்ள இடங்களில் ஏற்படுத்தித்தரப்படும்

• எல்லா வருடத்தை சேர்ந்த அனைத்து பீட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் 20.01.2017 இலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.

• கிழக்குப் பல்கலைக் கழகத்தில் வந்தாறுமூலை வளாகம் மற்றும் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட வளாகம்; ஆகியன 21.01.2017 காலை 8.00 மணியிலிருந்து மாணவர்களுக்கு உட்புக விலக்களிக்கப்பட்ட இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

• மேற்குறிப்பிடப்பட்ட பல்கலைக் கழக வளாகங்களில் சட்டத்திற்கு புறம்பாக தங்குகின்ற மாணவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒப்பம்
வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன்
பதில் உபவேந்தர்

Notice

The Council of the Eastern University, Sri Lanka (EUSL) at its Special Meeting held on 20.01.2017 at 4.30 pm decided the following:
•     Accommodation would be provided to all students of EUSL.
•     Accommodation facilities would be provided to the 2nd and 3rd year students, outside the University.
•     Academic activities of all the batches of students of all Faculties will be suspended from 20.01.2017.
•     The University premises of EUSL, Vantharumoolai and Faculty of Health-Care Sciences are declared out of bounds to all students of EUSL with effect from 8.00 am on 21.01.2017.
•     Action shall be taken against the students who unlawfully occupy the University premises.
Dr.K.E.Karunakaran
Acting Vice Chancellor  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -