தாழ்மை என்றால் என்ன என்று படிக்க சல்மானைப் பாருங்கள் -மர்ஹூம் அஷ்ரப் உரை வீடியோ

ன்று கூட கட்சி தலைமையகத்துக்குள் போனால் பேப்பரை போட்டுக் கொண்டு படுக்கின்ற ஒரு சிரேஷ்ட சட்டத்தரணி இருந்தால் அது சகோதரர் சல்மான் அவர்கள் - தலைவர் MHM. அஷ்ரப்

"எந்த ஒரு விடுதலை இயக்கத்திலும் அல்லது எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இந்த மாலைகள் வாங்குவதற்கு நிறைய பேர் இருப்பார்கள், மேடையில் இருப்பதற்கு நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் இந்த மேடைகளை வெறுத்து மாலைகளை வெறுத்து திரை மறைவில் இயங்குகின்ற தோழர்களும் போராளிகளும் இல்லாத கட்சிகளினால் வெற்றி பெற முடியாது. அந்த வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாக்கியம் பெற்ற ஒரு கட்சியாகும்

எங்களுக்கு மத்தியிலே ஊமைகளாய் வேலைகாரர்கள் போன்று செயற்படும் எத்தனையோ சகோதரர்கள் இருக்கின்றார்கள். அந்த சகோதரர்களின் உழைப்புதான் எம்முடைய வெற்றி எல்லாவற்றுக்கும் அத்திவாரமாய் அமைந்து இருக்கின்றது. அந்த வரிசயில் நாங்கள் முதலாவது நன்றி கூற கடமைப்பட்டவர்கள் இந்த செயலமர்வை செய்வதற்கு முக்கியமாய் இருந்து உழைத்த சகோதரர்கள் அதிலும் முக்கியமாக குறிப்பிட வேண்டியவர்கள் சகோதரர் MHM.சல்மான் அவர்கள்

அவரை உங்களுக்கு தெரியுமோ தெரியாதுTo Learn Humanity please look at Salman (மனிதத் தண்மையை பார்க்க வேண்டுமாக இருந்தால் தயவு செய்து சல்மானை பாருங்கள்)

தாழ்மையை யாரவது படிக்க வேண்டுமாக இருந்தால் தாழ்மை என்ற சொல்லுக்கு வரைவிலக்கணத்தை படிக்க வேண்டுமாக இருந்தால் நீங்கள் அகராதியை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை சகோதரர் MHM. சல்மான் அவர்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்

இன்று நேற்று அல்ல 1986ம் ஆண்டு பாஷா வில்லாவிலே இந்த கட்சியை பிரகடனம் செய்யப்பட்டதில் இருந்து அதே மூலையில் தான் அவர் இன்னும் இருந்து கொண்டே இருக்கின்றார். மிகவும் கஷ்டத்துடன் ரெப்பியா சேர்மன் ஆக நான் வைத்துக் கொண்டு இருக்கின்றேன். 3 மாதத்துக்கு ஒரு தடவை வந்து தலையை சொரிந்து கொண்டு சேர் என்னை விடுங்க சேர் என்று சொல்லுவார்.

இன்று கூட கட்சி தலைமையகத்துக்குள் போனால் பேப்பரை போட்டுக் கொண்டு படுக்கின்ற ஒரு சிரேஷ்ட சட்டத்தரணி இருந்தால் அது சகோதரர் சல்மான் அவர்கள்

நம்முடைய கட்சியில் நாங்கள் மமதை ஒழிக என்று விழிக்கின்றோம். மடமை இருக்கின்ரவர்களிடம்தான் மமதையும் இருக்கும். புத்திக்காரர்கள் மமதை உள்ளவர்களாக இருக்க முடியாது Only stupid person will be a man with ego

ஆகவே நாங்கள் அவருக்கு கடமைப்பட்டு இருக்கின்றோம், இந்த கட்சி அவருக்கு கடமை பட்டு இருக்கிறது."

இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றும் மக்கள் மனதில் வாழும் எம் தலைவரே சொல்லி விட்டார்.
தலைவர் MHM. அஷ்ரப் -

இயாஸ்தீன் எம் இத்ரீஸ்
சட்டபீடம் (இறுதி ஆண்டு)
கொழும்பு பல்கலைக்கழகம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -