யாழ் பல்கலைகழக கிளிநொச்சி தொழிநுட்ப பீடம் கற்கைகள் ஆரம்பம்..!

பாறுக் ஷிஹான்-
யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகமான தொழிநுட்ப பீடத்தின் கற்கை நெறிகள் நேற்று(20)ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி அறிவியல்நகாில் அமைந்துள்ள யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஏற்கனவே விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் என்பன இயங்கி வருகின்ற நிலையில் தற்போது தொழிநுட்ப பீடமும் இயங்க ஆரம்பித்துள்ளது.

நாடாளவிய ரீதியில் 23 மாவட்டங்களில் இருந்து 211 மாணவா்கள் இங்கு அனுமதி பெற்றுள்ளனா் என யாழ் பல்கலைகழக துணைவேந்தா் வசந்தி அரசரட்ணம் குறிப்பிட்டாா். 

அவா் கருத்து தெரிவிக்கையில்:-

யாழ் பல்கலைகழகத்தின் பத்தாவது பீடமாக தொழிநுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்ககையில் உள்ள பல்கலைகழகங்களில் எமது பல்கலைகழகம் மூன்றாவது நிலையில் தொழிநுட்ப பீடத்தையும் ஆரம்பித்துள்ளது.

இங்கு அனுமதி பெற்றுள்ள மாணவா்களுக்கான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. முதலாம் வருட மாணவா்களுக்கான தங்குமிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் 525 மில்லியன் ரூபா செலவில் 400 ஏக்கா் கட்டடம் அமைக்கும் பணிகள் அரம்பிக்கப்படவுள்ளன. அதன் பணிகள் நிறைவுற்றதும் பெரும்பாலும் இரண்டாவம் வருட கற்கைகளை மாணவா்க்ள அங்கு தொடரக் கூடியதாக இருக்கும். மேலும் இங்கு ஆண்,பெண்களுக்குரிய இரண்டு விடுதிகள் காணப்படுகின்றன. மேலும் இரண்டு விடுதிகள் அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

தொழிநுட்ப பீடத்திற்குரிய வசதி வாய்ப்புக்களை பொறுத்தவரை கடந்த வருடம் 13 மில்லியனுக்குரிய உபகரணங்களை வாங்கியிருக்கின்றோம்.இந்த வருடம் சுமாா் 120 மில்லியனுக்குரிய உபகரணங்களை கொள்வனவு செய்ய இருக்கின்றோம். எங்களுக்கு பல்கலைகழக மாணியங்கள் ஆணைக்குழுவும், உயா் கல்வி அமைச்சும் மிகவும் உறுதுணையாக இருந்து நிதி வசதிகளை ஏற்படுத்தி தருகின்றார்கள்.

மேலும் முக்கியமாக கிளிநொச்சி வளாகத்தில் பதினொறாவது பீடமாக விவசாய பீடத்துடன் இணைந்து விளையாட்டு விஞ்ஞான பீடத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் தொழிநுட்ப பீடத்தின் பிடாதிபதி எஸ். சற்குனராஜா,தொழிநுட்ப பீடங்களுக்கான தேசிய இணைப்பாளா் கலாநிதி ரிஏ. பியசிறி.பேராசிரியா் கே. கந்தசாமி, பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜா,விவசாய பீட பீடாதிபதி திருமதி ரி. மிகுந்தன் பதில் பதிவாளா் இராஜவிசாகன் மற்றும் விரிவுரையாளா், மாணவா்கள் என பலா் கலந்துகொண்டனா்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -