எம்.எம்.ஜபீர்-
சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள பாலர் பாடசாலைகளின் பரிசளிப்பு விழா சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக முன்பள்ளி கல்வி அபிவிருத்தி இனணப்பாளர் ஏ.ஏ.றஹீம், அம்பாரை உதவி உள்ளுராட்சி அலுவலக சன சமூக உத்தியோகத்தர் எம்.எம்.வாஹித், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.ஜௌபீர், பிரதேச சபையின் உயர் அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பிஸ்மில்லாஹ் பாலர் பாடசாலை, பாத்திமா பாலர் பாடசாலை, எம்.பீ.சீ.எஸ் பாலர் பாடசாலை, அல்-இஹ்ஸான் பாலர் பாடசாலை ஆகிய பாலர் பாடசாலைகளின் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசிகள் என்பன அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.





