பூனைகளிடம் மாட்டிக்கொண்ட எலிகளானது நமது முஸ்லிம்களின் நிலை..!

ன்றைய காலகட்டமானது உலகம் பேரழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது கிழக்கானாலும் மேற்கானாலும் காலத்துக்கு காலம் உலகை ஆக்கிரமிக்கும் மதப் போராட்டங்களும் சமூகப் போராட்டங்களும் வந்துதான் போகின்றன

முஸ்லீம்களானாலும் முஸ்லீம் அல்லதோரானாலும் அனைவரும் இன்று சடவாதத்தின் மடியில் வளர்த்தெடுக்கப்பட்டு குழந்தைகள் அநாகரிகத்துக்கும் பயங்கரவாதத்திற்கும் கொத்தடிமைகளாகவே உள்ளனர். இந்த தீய சக்தியால் கவரப்படும் கொள்கைகள் யாவும் தீயவையே.. அத்தீயவர்கள் மூலம் உருவாக்கிய அனைத்து அம்சங்களும் குறிப்பாக அரசியல் கல்வி கலாசாரம் கலை தத்துவம் ஞானம் இவையெல்லாம் தீய கொள்கையாக உருப்பெரும் தெளிவான ஞானம் சற்றும் இல்லாமல் நாசவாத கொள்கைகளுடன் வளர்ச்சி பெற்ற அவர்கள் வழிமுறைகள் யாவும மக்களின் உணர்வுகளின் தீவிரவாத கொள்கையைகளையே உருவாக்கி உஷார் ஏத்துகின்றன. அவர்களால் மனிதர்களுக்கு இரக்கமோ நேர்வழியோ காட்ட முடிவதில்லை..

தவறான வழிமுறைகளுடன் ஏற்பட்ட அவர்களின் அனைத்து துறைகளிலும் தவறான வழிமுறைகளைத்தான் கான முடிகிறது அதனால் அவர்களின் அனைத்து முன்மாதிரிகளும் செல்லாகாசே அதனால்தான் அவர்களிடம் மனித உரிமை அன்பு பனிவு கலாச்சாரம் பெண்ணியம் யாவும் பயனற்ற வழி முறைகளாகும்.

மனம் போன போக்கில் வாழுகின்ற இவர்களிடையே மனித பேதம் அரசியல் பேதம் நிற பேதம் இன பேதங்களை புகுத்தி அதை மக்களின் சாபக்கேடாக்கி வேடிக்கையாக பார்கின்றனர்.

உதரணமாக ஐரோப்பிய மறுமலர்ச்சி யின் போது விதைக்கப்பட்ட நச்சு விதையானது. இன்று அது பல கிலைகளை உருவாக்கியது. அம்மரத்தின் கனி மிகவும் சுவுயானது விசத்தன்மை கொண்ட அம்மரத்தின் அனைத்து பகுதிகளிலும் பார்க்க கூடியவர்களுக்கு கவிர்ச்சிகளைக்காட்டி மனிதனை ஈர்த்து தனது நச்சு வாடைகளை இரத்தத்தோடு பரவச்செய்து பல மனித போராட்தை விதைகளாக வித்திட்டு வைத்திருக்கின்றனர்.

இவர்கள் விதைத்த விதைகளை வேரறுக்க எடுத்த முயற்சிகள் யாவும் பெரும் போராட்டங்களை தோற்றுவித்துள்ளது முதலாளித்துவத்தை ஒடுக்க எடுத்த முயற்சி கம்யூனிசத்தை உருவாக்கியது ஜனநாயகத்தை ஒடுக்க எடுத்த முயற்சி சர்வதிகாரத்தில் முடிந்தது சமுதாய நோய்களை களைய எடுத்த முயற்சி பெண்ணியத்தின் சீரழிவையும் குடும்ப நல்லுறவையும் நாசமாகியது.

இப்படி அந்த நாசவாத அமைப்புகளின் மீள் திருத்தங்கள் யாவும் மனித கட்டுப்பாடற்ற இரத்த வெறியையும் மனித உரிமை மீறல்கள்களையும் கெட்ட செயல்களின் ரத்த சீற்றத்தையும் அதிகரித்து பல கொடிய அசுர வாழ்வுதனை தனது கிளைகளாக பரப்பி விட்டிருக்கின்றன.

எனவே நாம் எமது சமுதாயத்தை படு நாசத்திலிருந்து பாதுகாக்க நாச வாதிகளிடமிருந்து இஸ்லாத்தின் மீதுள்ள தப்பெண்ணங்களை களைய வேண்டும் அழிந்து போன சமுதாயத்தில் நாமும் சான்றோராகது பரிசுத்த குர்ஆனும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலலஹிவஸல்லம் அவர்களும் காட்டியபோதனைகளை திறந்த மனதுடன் பின் பற்றி வாழப்பழக வேண்டும்.

இன்று மேற்குலக நாடுகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் அடக்குமுறை அன்றய சூழலுக்கும் இன்றைய சூழலுக்கும் பெரும் வேறுபாடுகள் இருக்கின்றது ரோம பாரசீக இந்திய சீன நாகரிகங்கள் இஸ்லாத்துடன் மோதிக்கொள்ளும் போது இஸ்லாத்தின் கலாச்சார கொள்கையும் வளிபாடுகளும் உறுதியாக இருந்தது ஜிஹாத் இஜ்திஹாத் மூலம் உயிரூட்டப்பட்ட இஸ்லாம் ஆன்மீக துறையில் உயர்வு பெற்றிருந்தது.

அதனால் எல்லா துறைகளிலும் முஸ்லிம் சமுதாயம் தலைமை தாங்கலாயிற்று கலை கலாசாரம் ஒழுக்கம் விஞ்ஞானம் ஆன்மீகம் சிந்தனைகள் யாவும் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி மேற்குலக நாடுகளில் புது பொழிவுகளுடன் புரட்சிகளை ஏற்படுத்தியுள்ளது அந்நிய உலகு எமது இஸ்லாமிய கொள்கைதனை தமது கோட்பாடாக கொண்டு அனைத்து துறைகளிலும் இஸ்லாமிய வழிமுறைகள் பேனி வளர்த்துக்கொண்டனர்.

ஆனாலும் காலப்போக்கில் நமது சமூகம் தூங்கிப்போனதால் பொற்காலத்தின் கதைகள் மாறி மீண்டும் அனாச்சாரம் தலைவிரித்து ஆடத்தொடங்கிவிட்டது வாளாலும் சீரிய சிந்தனைகளாலும் பேனா முனையாலும் வளர்த்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்த முஸ்லிம்களின் சக்தி இழக்கப்பட்ட போது வாழ்கையில் வழிகாட்டியாக இருந்த குர்ஆனும் நபிமொழிகளும் பரிசுத்த ஏடுகளாக மாத்திரம் பாதுகாக்கப்பட்டது முஸ்லிம்கள் தூய வழி முறைகளிலிருந்து தடம் புரண்டனர் பாதை மாறிய புகை வண்டி போல்.

முஸ்லிம்களின் நாகரிகமும் பலமும் குறைய அந்நிய மேற்குலக நாடுகளின் நாகரிகம் முஸ்லிம்களின் இரத்தத்தில் புகுத்தப்பட்டது. உடலில் விசம் கலந்தது போல் முஸ்லிம்களின் அனைத்து துறைகளிலும் தீய விசவாயுக்கள் கலக்கப்படடன. முஸ்லிம்களின் ஆட்சியும் ஸ்தாணங்களும் தீயவர்களின் கரங்களில் இப்போது பூனைகளிடம் மாட்டிக்கொண்ட எலிகளானது நமது முஸ்லிம்களின் உலகம்.

தீய சக்திகள் உலகை இயக்க ஆரம்பித்தன முஸ்லிம்களின் ஆட்சி கோபுரங்களில் மீது நாசகார கொடிகள் பறக்கலாயிற்று முஸ்லிம்கள் என வெளித்தோற்றத்தில் மாத்திரமே நடை பிணங்களாக உலாவர தொடங்கலாயின இதயமும் மூளையும் தீய சக்திகலால் ஆளப்பட தொடங்கின எல்லாத்துறைகளிலும் வீழ்த்தப்பட்ட முஸ்லிம்களின் சாம்ராஜ்யம் மேற்குலக அநாகரிகத்தால் ஆளப்படுகின்றன.

ஆயினும் இஸ்லாமிய ஒளிப்பு முறைகளை கையாலும் இவர்களின் சக்திகள் இஸ்லாத்தை தகர்த்து விடப்போவதில்லை இனங்களை உயிர்களை அழிக்களாம் ஆனால் இஸ்லாம் புது ரத்தம் பாச்சியதுபோல் தன் புத்துணர்ச்சிளை உலகுக்கு பறப்பி தலை நிமிர்ந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை இதை அழித்திடும் ஆற்றலை எந்த சக்தியாலும் பெற்றிட முடியாது.

இஸ்லாமிய நடைமுறைகள் நம்மத்தியில் எடுக்கப்பட்டு போனதினால் மீண்டும் அதை நமது வாழ்வில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளும் போது முஸ்லிம்களின் ஆட்சியையும் நாகரிகங்களையும் கைப்பற்றிய மேற்குலக நாடுகள் தனது ஆயுதங்களாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்.

பார்க்கும் திசைகளெல்லாம் முஸ்லிம்கள் தோழ்வியுற்றுக்கொண்டே -யிருக்கிறார்கள் அன்னிய நாகரிகத்தில் கவரப்பட்ட எமது சமூகம் தன் சொந்த நாகரிகத்தால் வீழ்த்தப்பட்டது முஸ்லிம்களின் இதயமும் மூலையும் ரத்த நாலங்களும் அந்நியர்களின் கோரப்பிடியில் தூக்கனாம் குருவிகளின் கூடுகளைப்போல் தொங்கிக் கொண்டிருக்கின்றன இது நமது பெரும் தோழ்விகளாகும்.

முஸ்லிம் உலகை எங்கும் கவ்விக்கொண்ட இப்பயங்கரமான அபாயத்திலிலிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க இஸ்லாமிய அறிஞர்களும் இல்மிய நாடுகளும் இஸ்லாமி தலைவர்ளும் இஸ்லாமிய அரசியல் தலைவர்களும் முஸ்லிம் எழுத்தாளர்களும் மேற்குலக அநாகரிக வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் எமது முஸ்லிம் சமூகத்தை மீட்டெடுக்க முன்வரவேண்டும்.

துரதிஷ்டவசமாக முஸ்லிம் ஆட்சிபீடங்களும் அரசியல் தலைமை பீடங்களும் இஸ்லாமிய ஊடகங்களும் உயர்களும் சொத்துகளும் இன்று நாசகாரப்பிடிகளால் மிக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு இனப்படுகொலை இன அழிப்பால் எம் உறவுகளும் உணர்வுகளும் உடமைகளும் பிச்சிலங்களும் கண்ணிப் பெண்கள் தாய்மார்களும் நாதியற்ற நிலையில் பரிதாபமாக நம் கண்கள் முன்னே கற்பழிக்கப்பட்டு சிதைக்கப்படுகின்றனர் பார்கவே மனம் பரிதவித்துக் கதறுகிறது பரிதாபமாக அக்கினிக்கு இரையாகி சமாதியாகிக்கொண்டிருக்கும் நமது முஸ்லிம் தேசங்களை பாதுகாக்க முயல வேண்டாமா? காட்சிகளைப்பார்த்து நமது உள்ளம் குமுற வில்லையா?

நாதியற்று சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் குழந்தைகளின் ஒப்பற்ற அழுகுரல் நம் காதுகளில் விழுந்து இதயங்கள் ரணமாகவில்லையா?சகிக்கமுடியா துன்பங்களை அனுபவிக்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீ வந்து அவர்களை பாதுகாக்க வருவாய் என்ற ஏக்கத்துடனே நாளும் பொழுதும் காத்துக்கிடக்கின்றனர். அவர்களுக்கான குரல்கொடுத்து நீ விடுதலை தேடித்தருவாய் என்பதற்காகவே உன்னைப்பார்த்து அவர்கள் உன்னிடத்தில் உதவிக்கரங்களை நாடி அழுகின்றனர்.

ஆனாலும் உதவிகள் பயனற்றுப்போன எத்தனையோ உயிர்கள் கல்லறைப்பூக்களாக வாடி க்கிடக்கின்றனர் நாமோ நமக்கில்லையே வலி நமக்கேன் வீ ன் வம்பு என பொய்யான தூக்கத்தில் ஆழ்து கிடக்கின்றோம்.

இந்நிலை மாறவேண்டும் உலகளாவிய ரீதியில் முஸ்லீம்களுக்கு நடக்கும் கொடுமைகளை கைகட்டி வாய்மூடி வேடிக்கை பார்க்கும் நமது முஸ்லிம் அறிஞர்களும் அரசியல் தலைவர்களும் மீடியாக்களும் எழுத்தாளர்களும் முஸ்லீம்கள் யாவரும் ஒன்றினைந்து அவர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தும் வகையில் குரல் எழுப்பவேண்டும்.

நூற்றாண்டுகளில் வாளாலும் போனா முனையாலும் வளர்கப்பட்டது இஸ்லாம் இன்னும் வேடிக்கை பார்க நேரமில்லை கடையிசியில் உன்மீது கைவைத்து உன் சரித்திரம் அழிக்கப்படுவயற்குள் நாம் ஒரே குரலுடன் ஒற்றுமையுடனும் பேனாமுனையெனும் வாள் ஏந்தி பிர சமூகங்களையும் பேனி உரிமைக்குரல் எழுப்ப வேண்டும் போர் வேண்டாம் காயம் வேண்டாம் இரத்தம் வேண்டாம் மனித உயர்களை பலியிடும் ஆயுதங்கள் வேண்டாம் பிரார்த்தனைகளும் பேனாக்களும் அகிம்சை வழிப்போராட்டங்களுமே நமது கூரிய ஆயுதங்களாகும் அசுரர்களுக்கு இடியுமாகும்.

எனவே எமது சமுதாயத்தை பாதுகாக்க நாசகார வலையில் இருந்து வெளியே வந்து நமது சமூகம் அனைவரும் கைகோர்த்து ஒற்றுமையாக குரல்கொடுத்து நம்மீது தினிக்கப்பட்ட தீமைகளை வேரறுக்கவேண்டும் அப்போதுதான் நாளைய எமது தலைமுறையினர் தலை நிமிர்ந்து வாழமுடியும் என்பதை உணர்ந்து நாம் அனைவரும் செயல்படுவோமாக.

உறவுகளே இந்த மனித மனசுகளை நோக்கி எமது வரிகள் படையெடுப்பு நடத்த வேண்டும் நமது சமூகத்தின் இந்த பூமி ஒரு புதிய விடியலை எம் வரிகள் பூபாலமாக்க வேண்டும் மானுட மேன்மைக்கு மனிதர்களின் புதிய புதிய போராட்ட உணர்வுக்கும் உருவம் கொடுப்பதாலும் காலம் நமது சமூகத்தை அழித்து விட முடியாது நாம் குரல் கொடுக்க மரந்ததினால் இழந்துவிட்ட உயிர்கள் ஏராளம் நாம் சொகுசாக வாழ நினைப்பதினால் சாக்கடைக்குள் அடைக்கப்பட்ட அப்பாவி மக்கள் ஏராளம் எனவே நமது சமூகங்களுக்கான அடையாளங்களை மீட்டெடுக்க நம் வரிகளை ஆயுதமாக மாற்றுவோம் மாறுவோம்.
அல்லாஹ் நம் இஸ்லாமியர்களையும் பிர மத அப்பாவி மக்களையும் ஒன்றினைத்து வரும் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பானாக.
கவிப்பிரியன் ஆதில்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -