உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான இலவச இரசாயனவியல் வலைத்தளம்.!

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
யர்தர பௌதிக மற்றும் உயிரியல் விஞ்ஞான பிரிவு மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டும் விதமாக இரசாயனவியல் பாடம் தொடர்பான கற்கை மற்றும் கற்பித்தல் சாதனங்கள் #மும்மொழிகளிலும் கொண்டதாக முற்றிலும் இலவசமாக பயன்படுத்தத்தக்க வகையில் வயம்ப பல்கலை கழகத்தின் உணவு விஞ்ஞா மற்று போசனை பிரிவில் BSC இளமாணிப் பட்டப்படின் படிப்பின் இறுதியாண்டு மாணவனும் கல்குடா பிரதேசத்தில் உயர்தர மாணவர்களுக்காக இரசாயணவியல் பாடத்தினை கற்பிப்பதில் பிரபல்யமடைந்து வரும் முகமட் சப்றாசினால் தயாரிக்கப்பட்ட கற்கை வலைத்தளம் www.chemistrysabras.weebly.com ஆகும்.

குறித்த வலைத்தளத்தில் கீழ் கானும் நன்மைகளை மாணவர்கள் அடைந்து கொள்ள முடியும்.

கடந்த கால வினாத்தாள் தொகுப்பு
கடந்த கால வினாத்தாள் விளக்கவுரை
கடந்த கால வினாத்தாள் விளக்க நூல்கள்
இரசாயணவியல் சுருக்கக் குறிப்புகள்
அலகு ரீதியிலான கடந்த கால வினாத்தாள் தொகுப்பு
இரசாயணவியல் பாடக் குறிப்புகள்
பரிசோதனைக் காணொளிகள்
பட விளக்கங்கள்
இரசாயணவியல் பாடக் குறிப்பு நூல்கள 
பிரபல பாடசாலைகளின் முன்னோடி வினாத்தாள்கள்
அரசாங்க மாதிரி வினாத்தாள்கள்
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி

எனப் பல தரப்பட்ட இரசாயணவியல் கற்கை சாதணங்களை தமிழ், சிங்கள, ஆங்கில மும்மொழிகளிலும் வழங்குவதோடு சிறப்பாக,

Online பரீட்சைகள்
ஊக்குவிப்பு ஆக்கப் பகிர்வுகள்
மாணவர்களது சுருக்கக் குறிப்புகள், இரசாயணவியல் சார்ந்த சுவரொட்டி காட்சிப்படுத்துகைகள் எனப் பல தரப்பட்ட மாணவர் ஆக்கங்களைக் கொண்ட மாணவர் ஆக்கப் பகுதி 
என்பவற்றையும் இவ்வலைத்தளம் முன்னெடுக்கின்றது. முற்றிலும் இலவசமாக இலகு பதிவிறக்க முறையின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள www.chemistrysabras.weebly.com எனும் வலைத்தளம் உயர்தரத்துக்காக இரசாயணவியலை ஒரு பாடமாக தேர்வு செய்துள்ள மும்மொழி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிதும் உறுதுணையாக அமையுமென்பதில் எதுவித ஐயமுமில்லை. 

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு;

Mr. M.I. Mohammed Sabras
66, Hussainiya Road,
Oddamavadi – 03.
Email: mohammedsabras92@gmail.com
WhatsApp: +94775154232

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -