ஆதிப் அஹமட்-
மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஆரையம்பதி செல்வா நகர் பிரதேசத்தில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினால் அமைக்கப்படவுள்ள சிறுவர் பூங்காவிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீனின் வேண்டுகோளின் பெயரில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் இவ்வேலைத் திட்டத்திற்காக ரூபா முப்பது இலட்சத்தை அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்துள்ளார்.
மண்முனைப்பற்று பிரதேச சபையினால் அமுல்படுத்தப்படவுள்ள மேற்படி வேலைத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாலளர் கிருஷ்ணபிள்ளை தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது அடிக்கல்லினை நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நட்டு வைத்தனர்.


