கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஆலோசனை குழு கூட்டம் 09.12.2016 பி.ப.2.30 மணியளவில் மட்டக்களப்பு சர்வோதய கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் கெளரவ தண்டாயுதபாணி தலைமையில் இடம்பெற்றது குறித்த நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதல் அமைச்சர் கெளரவ நசீர் அஹம்மத் ,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கெளரவ ஏ.எல்.எம்.நசீர்,சபை தவிசாளர் கெளரவ கலப்பதி ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சார்பாக திருகோணமலை மாவட்டம் சார்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக்,அம்பாறை மாவட்டம் சார்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான தவம்,மற்றும் ஜவாத் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட கிழக்கு மாகாணத்திலுள்ள அணைத்து வலைய கல்வி பணிப்பாளர்கள் உட்பட மாகாண அமைச்சின் கணக்காளர்,திட்டமிடல் பணிப்பாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்01.குறித்த கூட்டத்தின்போது HNDE தேசிய உயர்கல்வி டிப்ளமோ ஆங்கில கற்கை நெறியை முடித்தவர்களுக்கு போட்டிப்பரீட்சை இன்றி ஏனைய மாகாணங்களை போன்று நேர்முகப்பரீட்சையின் மூலம் உள்வாங்க படவேண்டும்
02.அத்துடன் மாவட்டத்திலுள்ள ஆசிரியர்கள் அணைத்து கல்வி வலையங்களிலும் சமப்படுத்தல் வேண்டும்
03.புதிய குச்சவெளி கல்வி வலையம் ஸ்தாபிக்க படவேண்டும் போன்ற பல விடயங்கள் முன் வைக்கப்படவேண்டும்
04. எதிர்வரும் 2017 ம் ஆண்டில் திருகோணமலை மாவட்ட கட்டிட்டிமற்ற பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்கள் மற்றும் பௌதீக வளங்களை வழங்குதல்
05. அண்மையில் க.பொது.த.சா.தர பரீட்சைக்கு விண்ணப்பித்து பரீட்சை எழுத முள்ளிப்பொத்தானை மற்றும் திருகோணமலை ராஜகிரிய சிங்க பாடசாலைகளில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்தில் முஸ்லீம் மாணவ மாணவிகள் ஹிஜாப் அணிவது மற்றும் முஸ்லீம் பரீட்சாத்திகள் தாடி வைத்திருந்தது தொடர்பாக பெரும்பான்மையை சேர்ந்த பரீட்சை மேற்பார்வையாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பில் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரால் கேள்வி எழுப்பப்பட்டபோது
அதற்கு பதில் அளித்த மாகாண பணிப்பாளர் நிஸாம் உடனடியாக குறித்த பாடசாலைகளுக்கு விசேட குழு அனுப்பி வைக்கப்பட்டு குறித்த மாணவர்கள்
இடைஞ்சல் இன்றி பரீட்சை எழுதியதாகவும்
பரீட்சை தொடர்பாக அனுப்பட்ட சுற்று நிரூபத்தில் இரு காதுகளையும் காட்ட வேண்டும் என்றும் தமது ஆள் அடையாளம் உரிய முறையில் காண்பிக்கப்படவேண்டும் என்றாலும் குறித்த இரு பாடசாலையில் இருந்த ஒரு சில பரீட்சை மேற்பார்வையாளர்களின் அணுகு முறையே காரணம் எனவும் அவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெறாது எனவும் உறுதி அளித்தார்.




