தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது- ஏறாவூர் பொலிசில் புகார்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

பர் ஒருவரின் முகநூல் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது பற்றி அரசியல்வாதியொருவர் புகார் அளித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இது விடயமான புகார் ஒன்றை தான் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (19.12.2016) அளித்துள்ளதாக ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினரும், ஓய்வு பெற்ற ஆசியரும், முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தின் இணைப்பாளருமான ஜே.எம். முஸ்தபா தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் தெரிவித்த அவர்; நபர் ஒருவர் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தனது முகநூலில் விடயங்களைப் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனால் என்னை இழிவுபடுத்தும் அபிப்பிராயங்கள் பதியப்படுகின்றன. இந்த விடயம் எனது கடந்த கால அரசியல் மற்றும் சமூகசேவைப் பணிகளை தரக்குறைவாக மதிப்பிடுவதாகவும், எனக்கும் எனது குடும்பத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

எனவே, இது குறித்து விசாரிக்குமாறும் சம்பந்தப்பட்ட நபருக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறும் எனக்கேற்பட்ட மானபங்கத்திற்கு இழப்பீடு தருமாறும் கேட்டிருக்கின்றேன்.” என்றார். இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -