உலக உணவு தினம் இன்று : மலையகத்தில் போராட்டம்

க.கிஷாந்தன்-
ணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒக்டோபர் 16ம் திகதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. 

உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக் கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உணவு தொடர்பான பிரச்சினையில் மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உலக அளவில் வறுமையை ஒழிப்பதும் இந்தத் தினத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. உணவில் மாவு, புரதம், தாது, கொழுப்பு, உயிர் சத்து (விட்டமின்) போன்றவை கலந்து இருப்பதே சரிவிகித உணவாகும். உயிர் சத்தும் தாது உப்புகளும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

அந்தவகையில் மலையகத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு, பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில், 16.10.2016 அன்று காலை 10.00 மணிக்கு தலவாக்கலை நகரில், விழிப்புணர்வு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

குறித்த போராட்டம் தலவாக்கலை பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த மேற்படி இயக்கத்தின் இணைப்பாளர் எஸ்.டி.கணேசலிங்கம்,

பெருந்தோட்டப்பகுதியில் வருமானம் குறைவின் காரணமாகவே போஷாக்கான உணவு வகைகளை பெற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு வறுமையில் வாழ்கின்றனர்.

இதன் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் போஷாக்கு அற்ற குழந்தைகளே அதிகமாக உள்ளனர். பெருந்தோட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு விவசாய காணிகள் இல்லாமையினால் இரசாயண அற்ற உணவு உற்பத்திகளை உற்பத்தி செய்ய முடியாத அளவிற்கு உள்ளனர்.

இதனால் அரசாங்கம் இம்மக்களின் போஷாக்கு மற்றும் சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்வதற்கு திட்டம் ஒன்றினை முன்மொழிய வேண்டும். இதன் ஊடாக இம்மக்களின் வாழ்க்கையை சிறந்ததாக மாற்ற முடியும் என பெருந்தோட்ட காணி உரிமைக்கான சமூக இயக்கத்தின் இணைப்பாளர் எஸ்.டி.கணேசலிங்கம் என்றார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -