சமூக அக்கரை கொண்ட இளைஞர்களிடமிருத்து ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன் - பிரதியமைச்சர் அமீர் அலி

எம்.ரீ.எம்.பாரிஸ்-
King of batti முகநூல் பக்கம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 14.10.2016 மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களினது ஒன்றினைத்த முயற்சியாக மாற்றத்திற்கான பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைதலைமையும் சட்டதரணியுமான கௌரவ எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் திருக்கரத்தால் இம் முகநூல் பக்கம் பிரதேச இளைஞா்களது பங்குபற்றுதலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார் “அரசியல் என்ற விடயம் மக்களுக்காக மக்களின் தலைவர்களால் ஆற்றப்படும் உன்னத செயற்பாடாகும் இதில் சிலர் தவறாக வழிகாட்டப்படுகின்றனர் இதனால் அவா்கள் நிலைமாறி செல்வார்கள் இதன் போது சமூகத்தின் மீது அக்கரையும் அன்பும் கொண்டுள்ளவர்கள் தாமும் தமது பாடும் என்று இருத்து விடாமல் இதற்கு வழிகாட்டுவது கட்டாய கடமையாகும்.

தொடர்ந்தும் தமது கருத்துக்களை தெரிவித்த பிரதியமைச்சர் “இவர் அமைச்சர் இவருக்கு நாம் எப்படி ஆலோசனை கூற முடியும் என்று சிலர் ஆக்க பூர்வமான சிந்தனைகளையும் அவர்களின் சமூக பணியினையும் மக்கள் மன்றத்தில் பிரதிபலிக்க செய்ய முடியாமல் அதற்கான வாய்ப்புக்களையும் இழந்து நிற்கின்றனர்.

அமைச்சர் அமீர் அலியும் உங்களை போன்ற மனிதர்தான் அவரிடமும் அன்பு பாசம் சமூகத்தின் மீதான அதித அக்கரை எல்லாம் உண்டு சமூக மறுமலர்ச்சிக்கான விடயம் என்று ஒரு விடயத்தை நாம் முன்னொடுக்கும் போது அது வெற்றி பெறவும் நீடிந்து நிலைத்து நிக்கதக்கதான அபிவிருத்தி பணிகளை முன்கொண்டு செல்வதற்கு பொறுமதிமிக்க மனிதர்களினதும் நவீன கால சூழல்களுக்கும் உல மாற்றங்களுக்கும் ஏற்பவும் எமது பாரம்பறியங்களுக்கு ஏற்பதான அபிவிருத்தி பணிகளை நாம் முன்கொண்டு செல்வதற்கும் சமூகத்தின் மீது அக்கரை கொண்ட இளைஞர்களிடம் இருத்து ஆலோசனைகளை தாம் அதிகமாக எதிர்பார்ப்பதாக பிரதியமைச்சர் அமீர் அலி குறிப்பிட்டார்.

விஷேடமாக King of batti பேஸ்புக் பக்கத்தினை நீங்களும் லயிக் https://www.facebook.com/King-of-batti-644874922353074/

செய்வதன் மூலம் தொடர்ந்தும் எனது மக்கள் நல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அறிந்து கொள்ள முடியும் மேலும் உங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்களை பிரதியமைச்சா் அமீா் அலி அவா்களுக்கு நேரடியாகவும் அல்லது நீங்கள் எமது பேஸ்புக் பக்கத்தின்னூடாகவும் தெரிவிக்க முடியும் உங்கள் கருத்துக்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்பதனை மகிழ்வோடு அறிய தருகின்றோம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -