பொத்துவில்: இழுத்து மூடப்பட்டிருந்த பள்ளிவாயலை மீண்டும் திறப்பதற்கு உதவுங்கள்..!



பொத்துவில் சின்ன உல்லையில் சுமார் 13 வருடங்களாக இயங்கி வந்த மஸ்ஜிதுல் மபாசா பள்ளிவாயல் வளவினை தனது இடம் என கோரி அப்பள்ளிவாயல் அமைந்திருக்கும் இடத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்ததையும் எதிராளியின் வழக்குத் தாக்கலின்படி குறித்த இடம் பறிபோனதையும் நாம் யாவரும் அறிந்தவொரு விடயம். பின்னர் அத்தீர்ப்புக்கு எதிராக பள்ளிவாயல் தலைவர் கல்முனை மேல்நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார்,அவ்வழக்கிலும் தோல்வியுற்று குறித்த பள்ளிவாயல் பறிபோய்விட்டிருந்தது.

இவ்வேளை நீதிமன்ற கட்டளைப்படி சுமார் ஒருவருடமாக பள்ளிவாயல் இழுத்து மூடப்பட்டிருந்தது, இதனால் அப்பகுதி மக்களும் உல்லாசப்பிரயாணிகளும் தங்களது மார்க்கக்கடமைகளை நிறைவேற்ற முடியாமல் மிகவும் அவஸ்த்தைபட்டு பலத்த சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவித்து வந்ததாக தெரிவித்திருந்தனர்.

இவ்வேளை பொத்துவிலைச்சேர்ந்த சமூக நல மேம்பாட்டாளர்களான எம்.ஏ.எம்.ஜௌபர் ஆசிரியர்,மற்றும் ஓய்வுபெற்ற மக்கள்வங்கி முகாமையாளரும் பொத்துவில் ஜூம்மா பள்ளிவாயல் தலைவருமான அல்-ஹாஜ் எஸ்.எம்.சுபைர் ஆகிய இருவர் தலைமையில் அல்-ஹாஜ் எம்.எல்.ஹாரூன், எம்.எம்.எச்.பரீட், என்.டீ.முகைதீன்பாவா ஆகியோர்களைக் கொண்ட குழுவொன்று பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில் குடியியல் சட்டக்கோவை பிரிவு 328 இன் கீழான விண்ணப்பம் ஒன்றை 16.6.2015 இல் தாக்கல் செய்திருந்தனர்.

இதற்கான கட்டளை ஒருவருடத்தின் பின்னர் 16.06.2016 இல் வழங்கப்பட்ட கட்டளையின் மூலம் மீண்டும் பள்ளிவாயல் சென்ற நோன்பு மாதத்தில் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 28.07.2016 இல் வாதி, பிரதிவாதிகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட சமரச முயற்சி காரணமாக சுமார் 6 மாதத்திற்கிடையில் குறித்த நபருக்கு ரூபா. 2,400,000.00 (ரூபா 24 இலட்சம்) பணத்தை கொடுக்க உடன்பட்டுள்ளனர்.

இத்தொகையினை குறித்த குழுவினரால் செலுத்தமுடியாமலும், அறவிட்டுக்கொள்ள முடியாத நிலையிலும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

எவ்வாராயினும் நீதிபதி கட்டளையின்படி இரு தரப்பினர்களது சமர்ப்பணத்தின் அடிப்படையில் அவர்கள் இணங்கிக்கொண்டதன்படி மஸ்ஜிதுல் மபாசா பள்ளி வாயலை மீட்டெடுப்பதற்கு குறித்த 24 இலட்சத்தையும் இரண்டு மாத தவணையில் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் மறுபடியும் பள்ளிவாயல் எந்தவிதமான நிபந்தனைகளுமின்றி உடனடியாக கைதுறக்க வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது.

எனவே குறித்த பள்ளிவாயலுக்காக செலுத்தவிருக்கும் ரூபா.24இலடசத்தையும் கொடுக்கவிருப்பதால் தங்களது உதவிகளை வழங்குமாறும் பொத்துவில் அனைத்து பள்ளிவாயல் சம்மேளனக் குழு தெரிவித்துள்ளது.

உங்களது உதவிகளை கீழ் வருகின்ற கணக்கு இலக்கத்திற்கு அனுப்பிவைக்குமாறும் அல்லது நேரடியாக தந்துதவுமாறும் கேட்டுக்கொள்கின்றனர்.

மீட்பு நிதியம்.
மஸ்ஜிதுல் மபாசா.
மஸ்ஜிதுல் மபாசா பள்ளிவாயல் வீதி, 
சின்ன உல்லை,
பொத்துவில் -05
மக்கள் வங்கி கணக்கு இலக்கம் : 164-2-001-2-0043040
தொலைபேசி: (0094) 714270476.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -