அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவிலைப் பிரித்து தனியான கல்வி வலயம் அமைக்க அன்று அதாஉல்லாவும், உதுமாலெப்பையும் விரும்பியிருந்தால் அன்றே அமைத்திருக்கலாம் என சுகாதார பிரதியமைச்சர் பைஷால் காசீம் தெரிவித்தார். இன்று (20) ஏறாவூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
அவர் மேலும் தெரிவிக்கையில்;
அன்று பொத்துவில் தனி வலயமாக அமைக்கப்படவேண்டும் என்று ஏற்பாடுகளைச் செய்தோம் ஆனால் அன்று அமைச்சர் அதாஉல்லா அவருடைய ஊர் சம்தந்தப்பட்ட விடையம் என்று அதனை நடக்க விடாமல் தடுத்து விட்டார்.
ஆனால், இன்று பொத்துவிலுக்கு தனியான கல்வி வலையம் அமைக்கும் சகல ஏற்பாடுகளையும் நாம் செய்து முடித்த பின்னர் சிலர் பெயரெடுக்க அறிக்கை விடுகின்றனர். எனவே மிகவிரைவில் பொத்துவில் கல்வி வலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.