தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படும் எந்தவொரு இராணுவ முகாமும்கிழக்கு மாகாணத்தில் இருந்து அகற்றப்பட மாட்டாது என பாதுகாப்பு செயலாளர்கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
எனினும் கிழக்கு மாகாணத்தில் உள்ள 64 இராணுவ முகாம்கள் டிசம்பர் மாதம் 31ம்திகதிக்கு முன் அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள்தெரிவித்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் அகற்றப்படுவதாககூறப்பட்டுள்ளவை இராணுவ முகாம் அல்லவென்றும், அவை முகாம்கள் போன்று சிறியளவில்செயற்படுபவை என்றும் தெரிவித்துள்ள அவர் குறித்த சிறிய முகாம்கள் அனைத்தும்அகற்றப்பட்டு ஒரு இடத்தில் ஒன்றாக அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சிறிய முகாம்களை அகற்றுவதால் கிழக்கு பகுதியின் பாதுகாப்புக்குஅச்சுறுத்தல் நிலவுமா? என குறித்த சிங்கள ஊடகம் பாதுகாப்பு செயலாளரிடம் வினவியபோது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுமாயின் அதன் பொறுப்பை பாதுகாப்புஅமைச்சும்,இராணுவத்தினருமே ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர் நாட்டின்பாதுகாப்பை கருத்திற் கொண்டே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும்பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.