கல்ஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த போது பாலியல் வன்புணர்வுக்கு உற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நேற்று மாலை இரானுவ சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரானுவ வீரர் திருகோணமலை விஜயபாகு பாபல ரெஜிமென்துவ எனும் படைப்பிரிவில் கடமையாற்றும் டபிள்யூ.எஸ்விக்ரமசிங்ஹ (38வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது-கன்தளாய்-சர்வோதயத்திற்கு அருகில் வசித்து வரும் 9353 எனும் இலக்கமுடைய பெண் பொலிஸ் உத்தியோகத்தரான எம்.எம்.பீ.மதுஷா திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் கன்ஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உட்கார்ந்து கொண்டிருந்த சீட்டில் இரானுவ சிப்பாய் உட்கார்ந்து வந்ததாகவும் அவ்வேளை இரானுவ சிப்பாய் பாலியல் வண்புனர்வுக்கு உற்படுத்தியதாகவும் தெரிவித்து கன்தளாய் பொலிஸ் நிலையத்தில் பஸ்ஸை நிறுத்தி முறைப்பாடு செய்துள்ளார்.
அதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கந்தளாய் பொலிஸார் இரானுவ சிப்பாயை கைது செய்துள்ளதாகவும் நாளை கன்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.