ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரே கட்சிதான் உள்ளிருந்தே தனி ஆதரவு தேடினால் அதிரடி நடவடிக்கை -ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஒரே அரசியல் கட்சிதான் என்றும், அதில் அணியணியாகப் பிரிந்து ஆதரவுக்குழுக்களை அமைக்க வேண்டிய அவசியம் அறவே இல்லையென்றும், அவ்வாறு பிளவுபடுத்த எவராவது எத்தனித்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் எச்சரித்தார்.

வெள்ளிக்கிழமை (26) வெளியான பத்திரிகையொன்றில் 'ஹக்கீம் - பஷீர் முரண்பாடுகளைக் களைய நடுநிலைக்குழு' என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட செய்தியொன்றை சுட்டிக்காட்டியே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தாம் பிரஸ்தாபச் செய்தியையிட்டு விசனமடைந்துள்ளதாகவும், இந்தச் செய்தி கட்சியை கூறுபோட்டுத் துண்டாட எத்தனிக்கும் சதிகாரர்களுக்குத் துணைபோவதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தனித்தனி ஆதரவுக் குழுக்கள் அல்லது நடுநிலைக் குழுக்கள் என்பவற்றின் தேவைப்பாடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை இல்லையென்றும், அப்படியான குழுக்களை தாமாகவே அமைத்துக் கொண்டு எவரும் கட்சியின் தலைமையை அணுக முடியாதென்றும் அவர் கடும் தொனியில் கூறினார்.

டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின்
ஊடக ஆலோசகர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -