ஸ்ரீ.மு.காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூதை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்எம்ற.ஐ.முகம்மட் றனூஸ்
சம்மாந்துறை பிரதேச சபை 
முன்னாள் உறுப்பினர்-  

ரோஸ் இயக்கத்தின் முன்னாள் போராளியும் மறைந்த தலைவர் அவர்களால் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டவருமான கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் அவர்கள் கட்சியிலிருந்து ஓய்வு கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

முஸ்லீம் தேசிய அரசியலைச் சீரழிப்பதில் பஷீர் சேகு தாவூத் அவர்களின் பங்களிப்பு கனதியானது. தலைவரின் மரணத்தின் பின்னர் தனது திருகுதாளங்களை தற்போதைய தலைமையிடம் அரங்கேற்றி தலைமையை நெருக்குவாரங்களுக்கு உட்படுத்தி பல்வேறு எதிர் சக்திகளிடம் கள்ளத் தொடர்புகளை பூண்டு கொண்டு அவைகளை பயன்படுத்தித் தலைமையினை பிழையாக வழிநடத்தித் தேசியப் பட்டியல்களை அபகரித்துப் பின்கதவால் அமைச்சராகும் அரசியலுக்கு முஸ்லீம் சமூகமும் முஸ்லீம் காங்கிரசும் இனிமேலும் பலியாகக் கூடாது .

இதுவரைகாலமும் அவர் பேசாத முஸ்லீம் மாகாணமும் தென்கிழக்கு அலகும் பற்றி அவர் இப்போத பேசுவது வேடிக்கையாகவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்சியைப் பலப்படுத்தும் எந்த முயற்சியையும் இதுவரை காலமும் செய்யாமல் முஸ்லீம் தேசிய அரசியலைப் பற்றியும் அதன் இருப்பியல் பற்றியும் வாயே திறக்காத பஷீர் சேகு தாவூத் அவர்கள் இன்று அடையாள அரசியல் பற்றி பேசுவது அபத்தமானது.

கல்முனையில் தலைவர் அஷ்ரப் அவர்களின் நினைவுப் பேருரையில் அரசுடன் இணைந்து மூன்று வார காலத்துக்குள் கரையோர நிர்வாக மாவட்டம் பெற்றுத் தருவோம் என்று தன்னிச்சயாக கூறிய பஷீர் சேகு தாவூத் அவர்கள் பின்னாளில் கேபினெட் அமைச்சரான பின்னே அவற்றை மறந்து போனது ஆச்சரியம் ஆகும்.

மக்களை மந்தைகளாக நினைத்தே அவ்வாறு கூறி இருக்கின்றார்.

அரசியல் பதவிகளின் பகட்டுக்கும் சுக போகத்துக்கும் அடிமையாகி சமூக அரசியலில் இருந்து தூரமாகி தலைநகரில் தஞ்சம் கொண்டு கடலிலும் தரையிலும் உல்லாசிப்பவர்கள் கட்சியின் அந்தரங்கம் என்றும் கட்சியின் காணி கட்டிடங்கள் என்றும் ரகசியங்களை அம்பலப் படுத்தப் போகிறேன் என்று மிரட்டுவதற்கு இனிமேலும் இடமளிக்க முடியாது.

வானளந்த கதைகளை வைரமான குரலில் பேசி மக்களை உசுப்பேத்தி தன்னை ஒரு கர்ம வீரனாகப் பறை சாற்றிக் கொண்டு சர்வதேச சக்திகளின் சதித்திடடத்தின் முகவராக கட்சிக்குள் யார் வந்தாலும் அவர்கள் முற்றாக களையெடுக்கப் பட வேண்டும்.

வடக்கு கிழக்கு மக்களோடு அதிகாரத்துக்குப் பின்னர் இந்தத் தொடர்பும் கொண்டிராத ஒரு முன்னாள் போராளியான இவருக்கும் கட்சியின் வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது ஒரு போராளியான எனது அபிப்பிராயமாகும்.

இது தொடர்பாக அவர் விவாதிக்கத் தயார் என்றால் நான் அவருடன் பகிரங்க விவாதத்துக்குத் தயார் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நல்லாட்சி அரசாங்கத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் மகிந்த ராஜபக்சவிடம் நக்குண்டுவிட்டு அவரின் வெற்றிக்காகப் பிராத்தித்து விட்டு கட்சியின் தீர்மானத்துக்கு கட்டுப்படாமல் தலைமைக்கு கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமான முறையில் மகிந்த ராஜபக்ஷ வெல்வார் என்றும், வென்ற பின்னால் காட்சியைக் கூறாக்கி தலைமையை வேறாக்கி தான் கைப்பற்றிக் கொள்ளலாம் எனவும் வியூகம் வகுத்த இன்றய தவிசாளரை உடனடியாக கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும்.

இதுவரைகாலமும் கட்சியின் தலைமையை சூழ்நிலைக்கு கைதியாக நிர்ப்பந்தப் படுத்தி வந்த தலைமையின் சுயாதீனத்தைப் பாதித்து வந்த சுதந்திரத்தைப் பறித்து வந்த அத்தனை நபர்களும் கட்சியிலிருந்து நீக்கப் பட்டு கட்சியின் தலைமையானது புதிய உத்வேகத்துடன் புதுப் பலத்துடன் இளையவர்கள் துணை கொண்டு நமது விடுதலை வரலாற்றின் புதிய பக்கம் ஒன்றை எழுத முன்வருவது காலத்தின் கட்டாயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -