க.கிஷாந்தன்-
கொத்மலை வேவன்டன் தோட்ட மக்களுக்கு பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் 58 தனி வீடுளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் 21-08-2016 அன்று மதியம் இடம்பெற்றது.
கற்பாறைகள சரிந்து வருவதால் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் கொத்மலை வௌண்டன் தோட்ட மக்களுக்கு கௌரவ அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் பணிப்புக்கு அமைய மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 3 கோடி 77 இலட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீட்டில் இவ் வீடமைப்பு திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அமைச்சர் திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், எம். உதயகுமார், சரஸ்வதி சிவகுரு, “ட்ரஸ்ட்” நிறுவனத் தலைவர் வீ. புத்திரசிகாமணி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப், மலையக மக்கள் முன்னணி செயலாளர் நாயகம் ஏ. லோறன்ஸ் உட்பட முக்கியஸ்தர்கள் வரேவேரற்கப்படுவதையும், பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்படுவதையும், கலந்து கொண்ட பொது மக்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.