ஷிப்லி பாறூக்கின் முயற்சியால் மட்டக்களப்பில் பெண்களுக்கான விஷேட பஸ் சேவை..!

ஹைதர் அலி -
ரையம்பதி, காத்தான்குடி, நாவற்குடா மற்றும் கல்லடி பிரதேசங்களிலிருந்து மட்டக்களப்பு நகரத்திற்கு பிரத்தியோக வகுப்பிற்காக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் செல்லுகின்ற பெண் மாணவிகளுக்கு பிரத்தியோகமாக (விஷேடமாக) ஒரு மகளிர் பேரூந்து சேவை ஒன்றினை நடாத்துவதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகார சபையுடன் தொடர்புகொண்டு அதனை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு காரியாலயம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதனை தொடர்ந்து இன்று ஞாயிறுக்கிழமை (21.08.2016) பி.ப. 02.30 மணியளவில் ஆரையம்பதி பேரூந்து நிலையத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறூக் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இவ்வரலாற்றுமிக்க நிகழ்வில் கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகாரசபையின் மாவட்ட காரியாலய போக்குவரத்து அதிகாரி ஜனாப் AM. அன்வர், முக்கிய பிரமுகர்கள், பெண்கள் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த மகளிர் பேரூந்து சேவையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக ஆரம்பிப்பட்ட ஓர் சேவையாகும். இச்சேவையானது ஆரம்பகட்டமாக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பி.ப 2.30 மணிக்கு ஆரையம்பதியிலிருந்து மட்டக்களப்பு நகருக்கும் மீண்டும் 6.00 மணிக்கு மட்டக்களப்பு நகரிலிருந்து ஆரையம்பதிக்கும் இவ்விசேட மகளிர் பேரூந்து சேவை நடைபெறும். இச்சேவையினூடாக பிரத்தியோக வகுப்புகளுக்கு செல்லும் விசேடமாக பெண் மாணவிகள் அச்சமின்றி பாதுகாப்பாக தமது கல்வி சேவையினை முன்னெடுத்து செல்வார்கள். அத்துடன் அலுவலகங்களில் கடமைபுரிகின்ற பெண்களுக்கும் அதேபோன்று தமது அன்றாட தேவைகளுக்காக பிரயாணம் செய்யும் பெண்கள் அனைவரும் இச்சேவையின் மூலம் பயன்பெறமுடியும்.

மேலும் இச்சேவையானது பயணிகளது பூரண ஒத்துழைப்புக்கள் கிடைக்குமிடத்து இதனை நாளாந்த சேவையாக காலையிலும் மாலையிலும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பாெறியியலாளர் ஷிப்லி பாறூக் இந்நிகழ்வின்பாேது தெரிவித்தார்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -