மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து துரித நடவடிக்கையெடுத்துவருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மாகாணசபையின் கீழுள்ள கிராமியமட்ட நடவடிக்கைகளை பலப்படுத்தும் திட்டத்த்pன் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றகையிலேயே அவர் இதனைக்குறிப்பிட்டார்.
ஏறாவூர் - கலாசார மத்திய நிலையத்தில் பிரதேச செயலாளர் எஸ்எல்எம் ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ஏஎல்எம் நஸிர் மற்றும் முதலமைச்சின் செயலாளர் ஏஎல்ஏ அஸீஸ் உள்ளிட்;ட உயரதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர். கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரிதநிதிகள் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தமை விஷேட அம்சமாகும்
இங்கு முதலமைச்சர் தொடர்ந்து பேசுகையில்-- மாகாண சபைகள் அமைக்கப்பட்டு சுமார் மூன்று தசாப்தங்களாகின்றபோதிலும் உரிய அதிகாரங்களைப் பயன்படுத்த முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலை காணப்பட்டது. இனப்பிரச்சினைத் தீர்வின் முதற்படியாக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டபோதிலும் ஒரு கையினால் அதிகாரங்களை பகிர்ந்தளித்து மறு கையினால் பறித்துக்கொள்ளும் கபடத்தனத்தையே கடந்தகாலத்தில் மத்திய அரசாங்கங்கள் மேற்கொண்டன. ஆனால் எமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நல்லாட்சி அரசு மாகாண சபைகள் உரிய அதிகாரங்களை செயற்படுத்தும் உரிமையை வழங்க முன்வருகின்றமைசிறந்த சகுனமாகும்.இதன் மூலம் அரசாங்கத்தினால் கிடைக்கப்பெறுகின்ற நிதி ஒதுக்கீடுகளை சரியான முறையில் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும்.
என்னுடைய பார்வையில் குறுகிய காலத்தில் பலம்வாய்ந்த சபையாக மாகாணசபைகள் இயங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு நாங்கள் தயாராக வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் இவ்வாண்டு செலவு செய்ய நிறைவான அளவிற்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வீதி அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளன. இனிவரும் காலத்தில் இதைவிட அதிகமான நிதி ஒருக்கீடுகள் கிடைக்கவுள்ளன.
13வது சட்ட திருத்திலே அரசியல் பரவலாக்கல் மூலம் ஒவ்வொரு மாகாண அமைச்சுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இதனை இந்த அரசாங்கம் மிகக்கவனமாக கவனத்தில்கொண்டு செயற்படுகிறது.
இதேநேரம் , நாங்கள் பல்வேறு நடவடிககைளை முன்னெடுக்கின்றபோதிலும் மக்கள் பாரிய வறுமையில் வாடுகின்ற நிலையினை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மக்களின் வாழ்க்கை முறையில் வருமானம் மிகவும் பாரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருமானத்தை அதிகரிப்பது தொடர்பாக மாகாணசபை பாரிய பங்கைளிப்பினை வழங்கவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் பாரிய தொழில் வாயப்புக்ளை ஏற்படுத்தும் பாரிய திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.