க.கிஷாந்தன்-
இலங்கை இராணுவ படையில் தொழில் புரியும் ஒருவர் நுவரெலியா இராணுவ முகாமில் தனது பணியை முடித்துவிட்டு வெலிமடை பிரதேசத்தில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டர் சைக்கிளில் செல்லும் போது வெலிமடை கெப்பட்டிபொல பிரதேசத்தில் வைத்து பிரதான வீதியை விட்டு விலகி வீதியில் ஓரத்தில் உள்ள 4 அடி கொண்ட கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் 20.08.2016 அன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயரிழந்தவர் வெலிமடை குருத்தலாவ பகுதியை சேர்ந்த சாஜன் மேஜர் பாலித்த குமார வயது 39 இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் வெலிமடை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.