ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அவர் இதன் போது கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடம்பெறும் அநீதிகள் காரணமாக தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக டலஸ் அழகப்பெரும கூறினார். பதவியில் இருந்து விலகியதன் பின்னர் மேலும் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்குவதாக டலஸ் அழகப்பெரும இங்கு மேலும் குறிப்பிட்டார்.