”மு.காவின் தலைமைத்துவத்தைக் கைப்பற்ற நினைப்பது பகல் கனவாகும்” றயீஸ்

ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரfப் அவர்கள் ஶ்ரீ.மு.காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை ஆரம்பித்தது சுய நல அரசியலுக்கோ, பிரதேசவாத,பகுதிவாத அரசியலுக்கோ அன்றி முழு இலங்கை முஸ்லீம்களின் உரிமைக் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே. 

இதற்காக கிழக்கை மையப்படுத்தி இப்பேரியக்கதை ஆரம்பித்தார்களே தவிர எப்போதும் அதன் தலைமை கிழக்கிலேயே அமைய வேண்டும் என்று எச்சந்தர்ப்பத்திலும் கூறியதில்லை என ஶ்ரீ.மு.காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும்,வட மாகான சபை உறுப்பினருமான தேசமான்ய எச்.எம்.ரயீஸ் கிழக்கின் எழுச்சி சம்பந்தமான தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து செல்லும் தனது ஊடக அறிக்கையில் முஸ்லீம் மக்களின் பிரச்சினைகள் பாராளுமன்றத்தில் மட்டுமன்றி சர்வதேசத்திற்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற மறைந்த தலைவர் அவர்களின் கோட்பாட்டை அவர்களின் பாசறையில் வளர்க்கப்பட்ட தற்போதைய தேசிய தலைவர் ரவூfப் ஹக்கீம் அவர்கள் செவ்வனே முன்னெடுத்துச் செல்லும் இன்றைய சூழ் நிலையில் சிலர் கட்சிக்குள் இருந்து கொண்டும், கட்சி மூலம் அரசியல் பிரவேசம் செய்து பின்னர் கட்சியையே காட்டிக் கொடுத்து அற்ப அமைச்சுப் பதவிகளுக்கு சோரம் போன சில சில்லறைகளும் சேர்ந்து கிழக்கின் எழுச்சி என்ற மாயையை உருவாக்கி மு கா வின் தலைமையை கைப்பற்ற ஆசைப்படுவது வெறும் கானல் நீரே. இவர்களின் இந்த பேராசை நிறைவேற கட்சியின் போராளிகள் ஒருபோதும் இடம் கொடுக்கப்போவதில்லை என்பது தெட்டத் தெளிவான விடயமாகும். 

 கடந்த வடமாகாண சபைத் தேர்தலின் போதும் தனக்கு அமைச்சுப் பதவி கொடுத்ததிற்கு கைமாறாக அன்றைய அரசின் கைபொம்மையாக செயற்பட்ட சிலர் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலரை தன் வசப்படுத்தி ஆளும் கட்சியில் வேட்பாளராக்கி படு தோல்வி கண்டதும், காலாகாலமும் தேசியப்பட்டியல் பிரதி நிதித்துவமும் அமைச்சுப் பதவியும் தனக்கே தர வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவர்களைக் கண்டு தான் வெட்கித் தலை குனிவதாகவும் தெரிவித்துள்ள மாகாண சபை உறுப்பினர் றயீஸ் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்கள் என மார்தட்டிக் கொள்ளும் இவர்கள் இதுவரை காலமும் கட்சிக்கு செய்த தியாகம் தான் என்ன என வினா எழுப்பியுள்ள றயீஸ் இவர்களுக்கு கிடைத்த அனைத்து சமூக அந்தஸ்த்தும், மரியாதையும் , பட்டம் பதவிகளும் இவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு அல்ல மாறாக அது முஸ்லீம் காங்கிரஸின் மூலம் கிடைக்கப்பெற்றது என்பதை இவர்கள் மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

இவர்களின் தனித் தேவைக்காக கட்சியை ஆட்கொள்ள சதிகள் மூலம் கிழக்கின் எழுச்சி எனும் மாயையைக் காட்டி மக்களால் புறக்கனிக்கப்பட்டவர்களை ஒன்ரு சேர்த்து, வன்னி அமைச்சரின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவரின் அடிவருடிகளையும் வைத்து மு கா வின் தலைமை கிழக்கிற்கே என்ர பிரதேசவாத வங்குரோத்து அரசியல் செய்ய முனையும் இவர்களை கிழக்கு மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதில் எதுவித ஐயமுமில்லை. 

புதிதாக முளைத்த முஸ்லிம் கட்சி தலைவர்களிடம் வெளிநாட்டு சக்திகளிடமும் சோரம் போய் உள்ள இவர்கள் மு கா வின் தலைமைத்துவம் தனக்கே வரவேண்டும் என்று சிலரும், செயளாலர் அதிகாரம் போதாதென்றும் கூறி மு கா வின் தலைமை கிழக்கிற்கே என்று கோசமிடுபவர்களுக்கு மு கா வின் போராளிகளும், தொண்டர்களும் தகுந்த பதிலடி கொடுக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்ரும் தெரிவித்துள்ள மாகான சபை உறுப்பினர் றயீஸ், கடந்த காலங்களில் இப்படியாக கட்சிக்கும் , தலைமைக்கும் துரோகம் செய்தவர்களுக்கு கிழக்கு மாகாண மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதை நினைவு கூறுவதாகம் குறிப்பிட்டுள்ளார்.

மு கா என்பது முழு இலங்கை முஸ்லீம்களயும் சுமந்துள்ள ஒரு தேசியக் கட்சி. பாரிய பொறுப்புக்களைக் கொண்டுள்ள இக் கட்சியை கிழக்கிற்குள்ளே முடக்க அம்மக்களே விரும்பமாட்டார்கள். எனவே சுயநல அரசியலுக்காக சமூக ஒற்றுமையை குழைப்பவர்கள் இவற்றைக் கைவிட்டு ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதையும் அறிக்கைகள் விடுவதையும் கைவிட்டு தற்கால அரசியலில் முதுமை பெற்றவரும் எல்லோராலும் அரசியல் சானக்கியன் என போற்றப்படுபவரும் தக்க நேரத்தில் சரியான தீர்மானம் எடுக்கக் கூடியவரும் முஸ்லீம் மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் தைரியமாக எதிரொலிக்கச்செய்பவரும் அப்பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் தைரியமிக்கவருமான தேசிய தலைவர் ரவூfப் ஹக்கீம் அவர்களின் தலைமையை ஏற்று கிழக்கின் எழுச்சியைக் கைவிட்டு மீண்டும் கட்சியோடு இணைந்து தலைமையுடன் கைகோர்த்துச் சொல்லுமாறு அழைப்புவிடுக்கிறேன். 

இவ்வாறு செய்யும் பட்சத்தில் மாத்திரமே எம் சமூகம் இழந்து நிற்கும் சமூக பொருளாதார கலாச்சார உரிமைகளை வென்றெடுப்பதுடன் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துச் செல்ல பேருதவியாக அமையும் என வட மாகாண சபை உறுப்பினர் றயீஸ் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -