கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் வயதெல்லையின்றி விண்ணப்பிக்கலாம் -முதலமைச்சரின் முயற்ச்சிக்குப் பலன்

கிழக்கு மாகாணத்தில் கடந்த வாரம் ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பட்டதாரிகளின் வயதெல்லை 35க்குள் மட்டுப்படுத்தப் பட்டிருந்தமை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மேற்கொண்ட அதிரடி முறைப்பாட்டு நடவடிக்கை தொடர்பில் சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளன என்று முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று (08) தெரிவித்தார்,

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்:

கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் பட்டதாரிகள் பலர் 35 வயதிற்கு மேற்படவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களின் வயதெல்லைக்கு ஏற்றால்போல் விண்ணப்பங்கள் கோரப்படவேண்டும். ஏன் என்றால் கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சரியான கல்வி கிடைக்காமை, இருப்பிட வசதி கிடைக்காமை, பாதுகாவலர்களின் இயலாமை, தாய், தந்தை மற்றும் உறவினர்களின் இழப்பு, பொருளாதாரம் மற்றும் இதர காரணங்களால் தமது கல்வியைத் தாமதப் படுத்தியமை காரணமாக மாணவர்கள் சிலர் காலம் கடந்து தமது பட்டப்படிப்பை முடித்துள்ளனர். எனவே அவர்களின் நலன்கருதி அவர்களைப் புறந்தள்ளி விடாமல் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின் போது குறிப்பிட்ட மாணவர்களையும் உள்நுளைக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ஆகியோர் விடுத்த கோரிக்கையை ஏற்ற பிரதமர் ரணில் விக்ரம சிங்க, ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, கல்வி அமைச்சர் அகிலராஜ் காரியவசம் ஆகியோர் இதற்கு பச்சைக் கொடி காட்டியிருப்பது சந்தோசமளிக்கிறது.

ஆகவே கடந்த வாரம் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் விண்ணப்பம் கோரப்பட்டமையில் குறிப்பிட்ட வயதெல்லையைத் தளர்த்தி அதில் மாற்றம் செய்ய தீர்மாணம் எடுகப்பட்டுள்ளது. 

அதனால் இதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் கிழகு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -