அமைச்சர் றிஷாத் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா..? - உதுமான்கண்டு நாபீர்

தான் சொப்பின் வேக்குடன் ஓடிவந்தவன் என்று கூறிக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழந்துவரும் அமைச்சர் றிஷாத் பதியுதீன், நாடுபூராயும் அப்பாவி மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வருகிறார். என்று நாபீர் பவுண்டேஷனின் தலைவர் உதுமான்கண்டு நாபீர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த றமழானில் சாய்ந்தமருது மக்களை உசுப்பேற்றும் வகையில் ஒரு மாதத்தில் நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை பெற்றுத்தருவதாக வீராவேசம் பேசினார். ஆனால் அங்குள்ள புதர்களைக்கூட அகற்றமுடியவில்லை. யாரோ ஆரம்பித்து வைத்து நிறைவடையும் தறுவாயில் உள்ள உள்ளுராட்சி சபையை தான் பெற்றுத்தருவதாக கூறி அம்மக்களை ஏமாற்றுகிறார்.

சாய்ந்தமருது மக்களுக்கு வாக்களித்த, ஜெமீலுக்கு பாராளமன்ற உறுப்புரிமை வழங்கி சாய்ந்தமருதை கெளரவிப்பேன். என்று ஜும்மா பள்ளியிலும் சீ பிறீசஸிலும் வாக்குறுதியளித்ததை நிறைவேற்றுவாரா? இதைவிட்டு சம்மாந்துறைக்கு பாராளமன்ற உறுப்பினர் தருவேன் பொத்துவிலுக்கு கல்விவலயம் தருவேன் என்று போகுமிடமெல்லாம் எதாவது தருவேன் என்று போலியான வாக்குறுதிகளை வழங்கும் அமைச்சர் றிஷாத் விடயத்தில் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்கவேண்டும்.

சொப்பின் வேக் கதயைக்கூறி வன்னி மக்களை ஏமாற்றும் றிஷாத், அம்பாறை உள்ளிட்ட ஏனைய பிரதேச மக்களையும் தனது ஏமாற்று வலைக்குள் உள்வாங்க சில ஏஜெண்டுகளை பயன்படுத்திவருகிறார். அவர்களுக்கு கொளுத்த வரப்பிரசாதங்களையும் வழங்கிவருகிறார். இவர்கள் விடயத்திலும் மக்கள் தங்களது அவதானங்களை செலுத்தவேண்டும்.

வடக்கும் கிழக்கும் இணையமுடியாதவாறு நீதிமன்ற தீர்ப்பு இருக்கின்ற இவ்வேளையில் கிழக்கு மக்களை உசுப்பெற்றுவதர்க்காக வீரம் பேசி முடியாத ஒன்றுக்கு உயிருட்ட முனைகிறார் அதனூடாக தனது வங்குரோத்து அரசியலை செய்ய மக்களை பலிக்கிடாவக்க முனைகிறார். வடக்கும் கிழக்கும் கிழக்கு மக்களின் ஒத்துளைப்பில்லாது எப்போதும் இணையமுடியாது என்பது சிறுபிள்ளைக்கும் தெரிந்த விடயம்.

பாராளமன்ற பதவி ஒரு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் முடிந்தால் கொடுத்திருப்பவரிடம் பெற்று தான் வாக்குறுதியளித்த யாருக்காவது கொடுப்பாரா? அல்லது இனியாவது போலி வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதை நிறுத்துவாரா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -