தன்னிடமும் வெளிப்படுத்துவதற்கு தேவையான பல இரகசியங்கள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினரும் மஹிந்த குழு ஆதரவாளருமான கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்ட இரகசியம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
ஜனாதிபதியிடம் உள்ள தனது இரகசியம் என்ன என்பது பற்றி தனக்குத் தெரியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற நடைபவனியில் 2 கோடிப் பேர் கலந்துகொண்டனர் என நடைபவனி தொடர்பில் இதற்கு முன்னர் இவர் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.