புலமைப் பரிசில் பரீட்சையில் பிரச்சினை - விசாரணைக்கு உத்தரவு

மாத்தளை வில்கமுவ நுககொல்ல பாடசாலையில் இன்று நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் இடம்பெற்றதாக கூறப்படும் பிரச்சினை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பரீட்சையில் விடை எழுதும் போது பரீட்சை நடாத்தும் அதிகாரிகளினால், தமது பிள்ளைகள் பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளதாக பெற்றோர் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இன்று காலை பரீட்சை ஆரம்பமாகி, குறித்த வினாத்தாள் கொடுக்கப்பட்டதன் பின்னர், அதற்கு தாங்கள் அறிவிக்கும் வரையில் விடை எழுத வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அரை மணி நேரம் கழித்து இன்னும் 15 நிமிடங்கள் தான் எஞ்சியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், குறித்த 15 நிமிடங்களில் எங்களால் முழுமையாக விடை எழுத முடியாமல் போனது என இன்று பரீட்சை எழுதிய மாணவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வலய கல்விப் பணிப்பாளரிடம் அறிக்கையொன்றைக் கோரியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -