கொத்மலை வௌண்டன் தோட்ட மக்களுக்கு பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் 58 தனி வீடுளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் 21-08-2016 அன்று பி.ப 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
கற்பாறைகள சரிந்து வருவதால் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் கொத்மலை வௌண்டன் தோட்ட மக்களுக்கு கௌரவ அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் பணிப்புக்கு அமைய மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 3 கோடி 77 இலட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீட்டில் இவ் வீடமைப்பு திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்படத்தக்கது.