கிழக்கு மாகாணாத்தில் பட்டதாரிகளின் வயதெல்லை 45ஆக அதிகரிப்பு..!

எப்.முபாரக்-
கிழக்கு மாகாணத்தில், பட்டதாரிகளின் நியமனங்களுக்கான வயதெல்லையை 35 இலிருந்து 45 ஆக கூட்டுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை இன்று வியாழக்கிழமை (25) நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் சபை நடவடிக்கைகள் மாகாண சபையின் அவைக் கேட்போர் ஆரம்பித்த போது முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் இரா. துரைரெட்ணம் ஆகியோர் மூலம், இது தொடர்பான அவசரப் பிரேரணை சமரப்பிக்கப்பட்டது.

இப்பிரேரணையை விவாதமின்றி ஏகமனதாக நிறைவேற்றுவதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கிணங்க இங்கு விவாதத்துக்கு இடமில்லை என சந்திரதாச கலப்பதி சபையில் அறிவித்தார். இந்த வயது எல்லையைக் கூட்டுவதற்காக தான் எடுத்த நடவடிக்கையை விவரித்த முதலமைச்சர் நஸீர் அஹமட், அதற்கு 35 இலிருந்து 40 ஆக உயர்த்த ஆளுநரின் அனுமதி கிடைக்கப்பெற்றதாகத் தெரிவித்தார்.

மீளவும் அதனை 45 ஆக உயர்த்துமாறும் இந்நடைமுறையை தொடர்ந்து 5 வருடத்துக்கு கிழக்கு மாகாணத்தில் கடந்த கால நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இச்செயற்முறையில் வைக்குமாறும் கோரியதாகவும் அது தொடர்பான பிரேரணையை சபையில் நிறைவேற்றவும் முதலமைச்சர் கோரினார். இதனையடுத்தே பிரேரணை நிறைவேற்றப்பட்டது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -