ஜித்தாவுக்கான புதிய consulate general இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு..!

வூதி அரேபியாவின் ஜித்தாவுக்கான புதிய consulate general ஆக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள பைசல் மக்கீன், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை இன்று சந்தித்து கலந்துரையாடினார். 

இன்று புதன்கிழமை இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,

“ஜித்தாவுக்கான consulate general ஆக நியமிக்கப்பட்டுள்ள பைசல் மக்கீனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர்வரும் சில நாட்களில் அவர் தனது பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார். இக்கலந்துரையாடலின் போது தனது கடமையை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைப்புக்களை வழங்குமாறு பைசல் மக்கீன் கோரிக்கை விடுத்திருந்தார். நிச்சயம் எனது ஆதரவும் ஒத்துழைப்பும் அவருக்கு உண்டு.”- என்றார். 

இதன் போது கருத்துத் தெரிவித்த ஜித்தாவுக்கான புதிய consulate general பைசல் மக்கீன், “இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுடன் மிகவும் நெருக்கமாக நாம் கடமையாற்றுவோம். நாட்டின் அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் நாம் புரிந்துணர்வுடன் செயலாற்றவுள்ளோம். இரு நாட்டு உறவினை மேலும் வலுவூட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். இராஜாங்க அமைச்சரின் ஆதரவுக்கு நன்றி” – என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -