அதிகாரிகளும் என்னுடன் இரவு பகல் பாராமல் மிக பக்கபலமாக நிற்கவேண்டும் - சுகாதார அமைச்சர் நஸீர்

அபு அலா -
கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்தியர்களின் பற்றாக்குறை மற்றும் தாதியர்கள், ஊழியர்களின் பற்றாக்குறைகளை கனிசமான அளவு நிவர்த்தி செய்யப்படும் இதேவேளை வைத்தியசாலையின்முக்கிய குறைபாடுகளையும் இவ்வருட இறுதிக்குள் தீர்த்துவைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறினார்.

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளை இல்லாமல் செய்வது தொடர்பாகவும், எதிர்கால அபிவிருத்திகள் பற்றிய உயர் அதிகாரிகளுடனான மீள் ஆய்வு குழுக்கூட்டம் நேற்று (26) மாலை கிழக்கு மாகாணசுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலைமையில் திருகோணமலை மாகாண சுகாதார பணிப்பாளர்பணிமனை காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை போன்ற மூன்று மாவட்டங்களிலும்உள்ள வைத்தியசாலைகளில் மிகவும் பின்தங்கிய நிலைமையில் காணப்படுகின்ற வைத்தியசாலைகளின் குறைபாடுகளை முதலில் நிவர்த்தி செய்யப்படுகின்ற இதேவேளை ஏனைய வைத்தியசாலைகளின்ஆளணிப்பற்றாக்குறைகளும் மிக விரைவில் நிவர்த்தி செய்யப்படவுள்ளதாகவும் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டு வருகின்ற அபிவிருத்திகள் மற்றும் வைத்தியசாலைகளின் குறைபாடுகளைநிவர்த்தி செய்வதற்கான சகல முன்னெடுப்புக்களும் இடம்பெற்றுவருகின்றது. இதற்கு நீங்களும் பக்க பலமாக நின்றுவருகின்றீர்கள். இருந்தும் இந்த செயற்பாடுகளை துரிதப்படுத்த சகல அதிகாரிகளும் என்னுடன் பக்கபலமாக இரவுபகல் பாராமல் நின்று செயற்பட்டால்தான் எமது மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் குறைபாடுகளை இவ்வருட இறுதிக்குள் ஓரளவு செய்துமுடிக்கலாம். அதற்கான சகல முன்னெடுப்புக்களையும் இன்றிலிருந்துஆரம்பிக்க நீங்களும் என்னுடன் வாருங்கள் என்றார்.

மேற்படி மீள் ஆய்வு குழுக்கூட்டத்தில் கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், உதவிச் செயலாளர்ஜே.உசைனுடீன், மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் கே.முருகானந்தன், மாகாண திட்டமிடல் வைத்திய அதிகாரிவைத்தியர் வி.பிரேமானந்தன் மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள பிராந்திய சுகாதார சேவைகளின் பணிப்பாளர்கள்,கணக்காளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -