குர்பான் மாடு­களை பள்­ளி­வா­சல்­க­ளிலும் வீடு­க­ளிலும் அறுக்க வேண்டாம் - சிங்­கள ராவய

முஸ்­லிம்கள் தமது குர்பான் கட­மைக்­காக மாடு­களை பள்­ளி­வா­சல்­க­ளிலும் பொது இடங்­க­ளிலும் வீடு­க­ளிலும் அறுப்­ப­தற்கு தடை விதிக்­கு­மாறும் சட்­டத்தை கடு­மை­யாக அமுல்­ப­டுத்­து­மாறும் சிங்­கள ராவய அமைப்பு உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் ஆணை­யார்கள் மற்றும் செய­லா­ளர்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

சட்­ட­ரீ­தி­யாக அனு­மதி வழங்­கப்­பட்­டுள்ள மாடுகள் அறுக்கும் மடு­வங்­களில் மாத்­திரம் மாடுகள் அறுக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அவ்­வா­றில்­லையேல் இனங்­க­ளுக்கு இடையில் குரோ­தங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு வழி­வ­குக்கும் எனவும் சிங்­கள ராவய அமைப்பு மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் செய­லா­ள­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்­ள­தாக சிங்­கள ராவ­யவின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்தார்.

நாட்டில் மாடுகள் அறுப்­ப­தற்கு அனு­ம­தி­யி­ருந்­தாலும் சட்டம் இருந்­தாலும் முஸ்­லிம்கள் அந்தச் சட்­டத்தை மதி­யாது விசே­ட­மாக குர்பான் காலத்தில் மாடு­களை அறுக்­கி­றார்கள்.

அறுக்­கப்­படும் மாடு­க­ளுக்­கான அனு­மதி உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிடம் பெற்றுக் கொள்­ளப்­பட வேண்டும். மாடு­களை போக்­கு­வ­ரத்து செய்­வ­தற்­கான அனு­மதி பொலிஸ் நிலை­யங்­க­ளி­லி­ருந்து பெற்றுக் கொள்­ளப்­பட வேண்டும். மாடுகள் கர்ப்பம் தரித்­தி­ருக்கக் கூடாது. மாடு­களை வாக­னங்­களில் சித்­தி­ர­வ­தைக்­குள்­ளாகும் வகையில் போக்­கு­வ­ரத்து செய்­யக்­கூ­டாது போன்ற சட்­டங்கள் எமது நாட்டில் அமு­லி­லுள்­ளன.

இந்தச் சட்­டங்கள் சரி­யாக கடைப்­பி­டிக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஒரு இனம் மாடு­களை தெய்­வங்­க­ளாக வழி­ப­டு­கி­றது. அதனால் அந்த இன மக்­களின் உணர்­வுகள் மதிக்­கப்­பட வேண்டும். அதனால் மாடுகள் அறுப்பதற்காக நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டம் கடுமையாக அமுல் நடத்தப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -