குடும்பச்சண்டைய விலக்கச் சென்ற பெண் பரிதாபமாக உயிரிளப்பு..!

க.கிஷாந்தன்-
ரண்டு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பை விலக்கச்சென்ற பெண்ணொருவர், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சம்பவம் நோட்டன் பிரதேசத்தில் 08.07.2016 அன்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

நோட்டன் பிரிட்ஜ் லொனக் தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதுடைய செல்லப்பன் வள்ளியம்மா என்பரவே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நோட்டன் லொனக் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில், 08.07.2016 இரவு 8 மணியளவில் இரண்டு குடும்பத்தினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது கணவரை சண்டையிலிருந்து விலக்கச்சென்ற மனைவி அங்கிருந்த இளைஞன் ஒருவனது தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்தக் கைகலப்பின் மூலம் காயமடைந்த கணவன், மகன் ஆகியோர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -